கோவை மாநகராட்சி பட்ஜெட் கூட்டத்தில் அடிதடி: மருத்துவமனையில் அதிமுக பெண் கவுன்சிலர்கள்
கோவை: கோவை மாநகராட்சி பட்ஜெட் கூட்டத்தில் ஏற்பட்ட ரகளையில் பெண் உறுப்பினர்கள் தாக்கப்பட்டனர்.
கோவை மாநாகராட்சி பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. அப்போது பேசிய மேயர் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பிறகு இன்று மாலை பட்ஜெட் மீதான விவாதம் நடக்கும் என்றார். இதற்கு திமுக உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து அதிமுக மற்றும் திமுக உறுப்பினர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது.
பிற்பகல் 3.30 மணிக்கு பட்ஜெட் மீதான விவாதம் நடத்தப்பட்டும் என்று மேயர் கூறியவுடன் பட்ஜெட்டைப் படித்துப் பார்க்க நேரம் வேண்டும் என்று திமுக எதிர்க்கட்சி தலைவர் நந்தகுமார் தெரிவித்தார். அதற்கு மேயர், இங்கு அதிமுக உறுப்பினர்கள் தான் அதிக அளவில் உள்ளோம். அதனால் மதியமே விவாதத்தை வைத்துக் கொள்ளலாம், அனைவரும் சாப்பிட்டுவிட்டு வாருங்கள் என்றார்.
உடனே திமுக உறுப்பினர் மீனா லோகநாதன் நாங்கள் ஒன்றும் சாப்பிட வரவில்லை, விவாதிக்க வந்துள்ளோம் என்று தெரிவித்து மேயரை அரங்கில் இருந்து வெளியேறவிடாமல் திமுக உறுப்பினர்கள் அனைவரும் சேர்ந்து முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது மீனா லோகநாதன் மற்றும் காங்கிரஸைச் சேர்ந்த காயத்ரி வெங்கடாச்சலம் ஆகியோரை அதிமுக உறுப்பினர்கள் சேர்ந்து தாக்கினர். இதையடுத்து எங்களை தாக்கியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கும் வரை இங்கிருந்து போக மாட்டோம் என்று அவர்கள் இருவரும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் திமுக உறுப்பினர்கள் தங்களை தாக்கியதாகவும், அதில் தங்களுக்கு காயம் ஏற்பட்டதாகவும் கூறி அதிமுக உறுப்பினர்கள் அன்னம்மாள், கௌரி ஆகியோர் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துமனையில் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளனர்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications