அடக் கருமாந்திரமே... பிச்சைக்கார சிறுவனிடம் ரூ.3000 பணத்தை அடித்துப் பிடுங்கிய போலீஸார்
வேலூர்: வேலூரில் பிச்சை எடுத்து வந்த 15 வயது சிறுவனை மிரட்டி அடித்து அவன் பிச்சை எடுத்து சேகரித்து வைத்திருந்த 3000 ரூபாய் பணத்தை போலீஸ்காரர்கள் சிலர் பிடுங்கிக் கொண்ட செயல் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வேலூரில் 15 வயதான சிறுவன் ஒருவன் பிச்சை எடுத்து பிழைத்து வருகின்றான். அவனுக்கு ஒரு கை கிடையாது. இரவில் கடை முன்பு படுத்துக் கொண்டு பகலில் பிச்சை எடுப்பான்.
பிச்சை எடுத்து கிடைக்கும் பணத்தை தன்னிடமுள்ள சாக்குப் பையில் வைத்திருப்பது வழக்கம். சில நாட்களுக்கு முன்பு இரவில் ரோந்து வந்த வடக்கு காவல் நிலையப் போலீஸார் அந்தப் பையனை எழுப்பியுள்ளனர். பின்னர் அவன் வைத்திருந்த சாக்குப் பையை எடுத்துப் பார்த்து சோதனை நடத்தியுள்ளனர். அதில் கொஞ்சம் பணமும், சில்லறைக் காசுகளும் இருந்தன.
இதையடுத்து அவனை கோட்டைக்கு அழைத்துப் போனார்கள். அவனை அடித்து துரத்தி விட்டு சாக்குப் பையில் இருந்த பணத்தை எடுத்துக் கொண்டனராம். பிறகு அதை தங்களுக்குள் பங்கு போட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது.
இந்த செயல் அப்பகுதி மக்களிடையே பரவி அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தற்போது இந்த விவகாரம் மாவட்ட எஸ்.பி. ஈஸ்வரன் வரை போய் விட்டது. அவர் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளாராம்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications