விஜய் நடத்தி வைத்த கல்யாணத்தில் கலாட்டா.. பாட்டில் உடைப்பு.. விஜய், புரோகிதர்கள் ஓட்டம்!

நடிகர் விஜய் நேற்று விழுப்புரத்தில் 11 ஏழை ஜோடிகளுக்கு இலவச திருமணத்தை நடத்தி வைத்தார். இத்திருமணம் விழுப்புரம்-சென்னை நெடுஞ்சாலையில் உள்ள ஆனந்தா திருமண மண்டபத்தில் நடந்தது.
மண்டபத்திற்குள் அத்தனை பேரையும் விட்டால் நாஸ்தியாகி விடும் என்பதால் திருமண ஜோடிகள், அவர்களது குடும்பத்தினர் உள்ளிட்ட 700 பேருக்கு மட்டுமே அனுமதி தரப்பட்டிருந்தது. பத்திரிக்கையாளர்களை அனுமதித்திருந்தனர்.
ஆனால் மண்டபத்துக்கு வெளியே ஆயிரக்கணக்கான விஜய் ரசிகர்கள் திரண்டு நின்றிருந்தனர். இந்த நிலையில் விஜய் அங்கு வந்தார். வந்தவர் பேசாமல் கல்யாணத்தை மட்டும் நடத்தி விட்டுப் போயிருந்தால் பிரச்சினை வந்திருக்காது. மாறாக பால்கனிக்கு வந்து தனது ரசிகர்களைப் பார்த்து சிரித்து கையசைத்ததால் சும்மா நின்றிருந்த ரசிகர்கள் உற்சாகத்தின் உச்சிக்குப் போய் விட்டனர்.
இந்த நிலையில் திருமணத்தை நடத்தி வைத்து விட்டு விஜய் பேசிக் கொண்டிரு்நதார். அப்போது திடீரென ரசிகர்கள் மண்டபத்தின் கதவை உடைத்தபடி உள்ளே அதிரடியாக நுழைந்தனர். பின்னர் எங்க தலைவரையா பார்க்க அனுமதிக்கவில்லை என்று கூறியபடி அங்கிருந்த சேர்களை அடித்து உடைத்தனர். வாட்டர் பாட்டில்களையும் தூக்கி வீசி உடைத்தனர்.
இதைப் பார்த்த விஜய், வேகமாக வேகமாக அங்கிருந்து கிளம்பினார். கிட்டத்தட்ட ஓடாத குறையாக அவர் வேகமாக வெளியேறினார். பக்கவாட்டு சுவரில் ஏறிக் குதித்து அவர் கிளம்பினார். அவரைப் பத்திரமாக அங்கிருந்து அனுப்பி வைத்து விட்டனர்.
இந்த நிலையில் உள்ளே பாய்ந்த ரசிகர்களின் அட்டகாசத்தால் திருமணத்திற்கு மந்திரம் ஓத வந்திருந்த புரோகிதர்கள், பத்திரிக்கையாளர்கள் மீது கண்ணாடிச் சிதறல்கள் பட்டு காயம் ஏற்பட்டது. அனைவரும் ஸ்தம்பித்து நின்றனர். சில புரோகிதர்கள் வேகமாக வெளியேறினர்.
இந்தக் களேபரத்தால் கல்யாண மண்டபமே போர்க்களம் போலானது. அது மட்டுமல்லாமல் சமைத்து வைத்திருந்த சாப்பாடும் யாரும் சாப்பிட ஆள் இல்லாமல் வீணாகிப் போனதாம்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications