31 வயது பெண்ணை தூக்கிச் சென்று கற்பழித்த 3 பேர் - அதில் ஒருவர் 70 வயது தாத்தா!
கோஸ்டா டெல் சோல், ஸ்பெயின்: ஸ்பெயின் நாட்டில் ஒரு அக்கிரமம் நடந்துள்ளது. இங்கிலாந்து நாட்டுச் சுற்றுலாப் பயணியை தூக்கிச் சென்ற 3 பேர் கொண்ட கும்பல் அப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளன். அந்தக் கும்பலில் ஒருவருக்கு 70 வயதாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்பெயின் நாட்டின் கோஸ்டா டெல் சோல் என்ற இடத்தில் இந்த சம்வபம் நடந்துள்ளது. அங்குள்ள குடியிருப்பில் விடுமுறைக்காக தனது காதலருடன் வந்து தங்கியிருந்தார் அந்த இங்கிலாந்துப் பெண். சில நாட்களுக்கு முன்பு தனது காதலருடன் அவர் அதிகாலையில் வாக்கிங் போனார். அப்போது 3 பேர் அடங்கிய கும்பல் அவர்களை மடக்கியது. காதலரை அடித்து உதைத்த அவர்கள் பெண்ணை மட்டும் தனியான இடத்திற்குக் கூட்டிச் சென்று பலாத்காரம் செய்தது. பின்னர் அவர்கள் தப்பியோடி விட்டனர்.
பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டவர்களில் ஒருவருக்கு 70 வயது என்று கூறப்படுகிறது. இது ஸ்பெயின் நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அந்தப் பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பாலியல் பலாத்காரக் குற்றத்தில் ஈடுபட்ட மூவரும் அராபியர்களாக இருக்கலாம் என்று போலீஸார் சந்தேகப்படுகின்றனர்.












Click it and Unblock the Notifications