கொல்கத்தாவிலிருந்து பாங்காங் சென்ற விமானத்தின் டயர் வெடிப்பு- 287 பேர் உயிர் தப்பினர்!
Subscribe to Oneindia Tamil
பாங்காங்: கொல்கத்தாவில் இருந்து தாய்லாந்து தலைநகர் பாங்காக் சென்ற தாய் ஏர்வேஸ் விமானத்தின் டயர் தரை இறங்கும் போது திடீரென வெடித்தது. உடனடியாக விமானத்தில் இருந்து 287 பயணிகள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.
கொல்கத்தாவில் இருந்து தாய் ஏர்வேஸின் இரட்டை என்ஜினின் பொறுத்தப்பட்ட 330-300 ஏர்பஸ் விமானம் அதிகாலை 2.48 மணிக்கு 287 பயணிகளுடன் பாங்காங் புறப்பட்டது. பாங்காங் ஸ்வர்ணபூமி விமான நிலையத்தில் காலை 6.06 மணிக்கு விமானம் தரை இறங்கியது. அப்போது விமானத்தின் டயர் திடீரென வெடித்தது. இதையடுத்து விமானத்தில் இருந்த 287 பயணிகளும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.
இதை அந்நாட்டு வானொலி அறிவித்தது. இந்த விபத்து பற்றி கூடுதல் தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.












Click it and Unblock the Notifications