பீகாருக்கு சிறப்பு அந்தஸ்து கேட்டு பிச்சை எடுக்கவில்லை: டெல்லி கூட்டத்தில் நிதிஷ் குமார் பேச்சு

Subscribe to Oneindia Tamil

Nitish Kumar
டெல்லி: பீகாருக்கு சிறப்பு அந்தஸ்து கேட்டு நாங்கள் பிச்சை எடுக்கவில்லை. அது எங்கள் உரிமை என்று அம்மாநில முதல்வர் நிதிஷ் குமார் டெல்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் நடந்த கூட்டத்தில் பேசினார்.

டெல்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் ஐக்கிய ஜனதாதள கட்சியினர், பீகார் மக்கள் என்று லட்சக்கணக்கானோர் கூடினர். கூட்டத்தை சமாளிக்க முடியாமல் போலீசார் திணறினர். பீகார் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து கோரி அம்மாநில முதல்வர் நிதிஷ் குமார் இன்று ராம்லீலா மைதானத்தில் உரை நிகழ்த்தியதை கேட்கவே ஏராளமானோர் கூடினர்.

கூட்டத்தில் பேசிய நிதிஷ் குமார் கூறுகையில்,

பீகாருக்கு சிறப்பு அந்தஸ்து கொடுங்கள் என்று நாங்கள் ஒன்றும் பிச்சைக் கேட்கவில்லை. அது எங்கள் உரிமை. சிறப்பு அந்தஸ்து கோருவதன் மூலம் பீகார் பிற மாநிலங்களுக்கு எதிராக இல்லை. மத்திய அரசு கொஞ்சம் உதவினால் பீகாரும் முன்னேற்றகரமான மாநிலம் ஆகிவிடும். தொழில் நிறுவனங்கள் இல்லாததால் தான் பீகார் மக்கள் பிழைப்பு தேடி பிற மாநிலங்களுக்கு செல்கின்றனர். பீகார் மாநிலத்தை மத்திய அரசு முறையாக கவனிக்கவில்லை.

உரிமையைக் கோரி இங்கு திறண்டுள்ள கூட்டம் பீகார் மக்களின் பலத்தை காட்டுகிறது. முன்பெல்லாம் டெல்லியில் வாழ்ந்த பீகார் மக்கள் கஷ்டப்பட்டனர், அவமதிக்கப்பட்டனர். ஆனால் தற்போது நிலைமை மாறிவிட்டது. ஏனென்றால் பீகார் முன்னேற்றப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. பீகார் மக்களின் பலத்தை டெல்லியில் உள்ள அதிகார வர்கத்தினர் உணர வேண்டும். நீங்கள் ஒரு நல்ல பீகாரியாகும் போது நல்ல இந்தியன் ஆகுகிறீர்கள் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+