For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சுவிஸ் பெண் கற்பழிப்பு.. சுற்றுலா பயணிகள் மீது பழியைப் போடும் மத்திய பிரதேச எம்.பி.

Google Oneindia Tamil News

போபால்: மத்திய பிரதேச மாநில உள்துறை மந்திரி உமா சங்கர் குப்தா, 'வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் விதிமுறைகளை கடைப்பிடிப்பதில்லை என்றும், அவர்கள் நடவடிக்கைகளை உள்ளூர் போலீசாருக்கு தெரிவிக்க வேண்டும். ஆனால் அவர்கள் அவ்வாறும் செய்வதில்லை' என்றும் கூறியுள்ளார்.

மத்திய பிரதேச மாநிலத்தில், சைக்கிள் சுற்றுப்பயணம் மேற்கொண்ட சுவிட்சர்லாந்து பெண்ணை சென்ற வாரம் 8 பேர் கொண்ட கும்பல், பாலியல் பலாத்காரம் செய்துள்ளது. இதில், அவரது கணவரும் தாக்கப்பட்டார். இதுதொடர்பாக 20 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை நடை பெற்று வருகிறது.

நாட்டை யே அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்த பாலியல் வன்கொடுமை வழக்கு விசாரணையை துரிதமாக நடத்தி, பாதிக்கப்பட்டவர்களுக்கு கட்டாயம் நீதி வழங்க வேண்டும் என்று சுவிட்சர்லாந்து தூதரகம் வலியுறுத்தியுள்ளது. மத்தியப் பிரதேச அதிகாரிகளிடம் தங்கள் கோரிக்கையை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள மத்திய பிரதேச மாநில உள்துறை மந்திரி உமா சங்கர் குப்தா , ''இந்தச் சம்பவம் நம்முடைய நாட்டுக்கு ஏற்றபட்ட துரதிருஷ்டமாகும். வெளிநாட்டு பயணிகள் இங்கே வரும்போது அவர்களது சுற்றுப்பயண விவரத்தை போலீஸ் உயர் அதிகாரிகளிடம் தெரிவிக்க வேண்டும். இதுதான் நடைமுறை வழக்கம். ஆனால் அவர்கள் அதை பின்பற்றுவதில்லை '' என்றார்.

English summary
Terming as "unfortunate" the incident of gangrape of a Swiss woman, Madhya Pradesh Home Minister Uma Shankar Gupta said foreign tourists were not following rules about informing local police about their movements.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X