For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

"அம்மா திட்டம்' - சென்னையில் நாளை முதல் தொடக்கம்

Google Oneindia Tamil News

Government Amma scheme to be launch tomorrow
சென்னை: அனைத்து கிராமத்திலும் வாழும் அடித்தட்டு மக்களுக்கு அதிக சேவை வழங்குவதற்குரிய "அம்மா திட்டம்' வருகிற 19ம் தேதி முதல் சென்னையிலும் செயல்படுத்தப்பட உள்ளது. சென்னை மாவட்ட கலெக்டர் இது குறித்த செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

'தமிழக முதல்வரால் கடந்த 24.2.2013 அன்று துவக்கப்பட்ட "அம்மா திட்டம்' (அனைத்து கிராமத்திலும் அடிதட்டு மக்களுக்கு அதிக சேவை வழங்கல் திட்டம்) சென்னை மாவட்டத்தில் வருவாய்த்துறை சார்பில் அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களுக்கு உட்பட்ட வட்டங் களில் சுழற்சி முறையில் செயல் படுத்தப்பட உள்ளது.

எந்தெந்த பகுதிகளில் முகாம் நடைபெறும் என்பது பொதுமக்களுக்கு பத்திரிக்கை வாயிலாக அவ்வப்போது தெரிவிக்கப்படும்.

இது தொடர்பாக வரும் 19.3.2013 முதல் இனி வரும் பிரதி செவ்வாய்க் கிழமை தோறும், சென்னை மாவட்டத்தில் உள்ள 5 வட்டங்களிலும், ஒவ்வொரு வட்டத்திலும் ஒரு கோட்டம் வீதம் 5 கோட்டங்களில் சுழற்சி முறையில், காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மக்கள் குறைகளை கேட்க வருவாய் வட்டாட்சியர் தலைமையில் "அம்மா திட்ட முகாம் கள்' நடைபெறும் என்று தெரிவித் துக்கொள்ளப்படுகிறது.

முகாமன்று பொதுமக்கள் கீழ்க்கண்ட இனங்கள் தொடர்பாக மனுக்கள் அளிக்குமாறு கேட்டுக்கொள் ளப் படுகிறார்கள்.

1. பட்டா மாறுதல்கள் (உட்பிரிவு இல்லாத இனங்கள்).
2. குடும்ப அட்டைகளில் மேற்கொள்ள வேண்டிய திருத்தங்கள்.
3.பிறப்புமற்றும் இறப்பு சான்றிதழ்கள்.
4. சாதி, வருமானம் மற்றும் இருப்பிட சான்றிதழ்கள்.
5. வாரிசுரிமைச் சான்றிதழ்கள்
6. முதல் பட்டதாரி / குடும்பத்தில் பட்டதாரி இல்லை என்பதற் கான சான்றிதழ்கள்.
7.ஆண்வாரிசு இல்லை என்ற சான்றிதழ்கள்.
8. குடும்பத்தில் இரு பெண் குழந்தைகள் மட்டும் உள்ளதற்கான சான்றிதழ்கள்.
9. முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட உதவித்தொகை கோரும் மனுக்கள்.
10. துயர் துடைப்பு / விபத்து நிவாரணம் கோரும் மனுக்கள் மீதான அறிக்கை.
சென்னை மாவட்ட வருவாய் அலகில் உள்ள அனைத்து வட்டங்களி லும் 6 மாத காலத்திற்குள் குறைகளை கேட்க பிரதிவாரம் செவ்வாய்க் கிழமை அன்று அம்மா திட்ட முகாம் கள் சுழற்சி முறையில் படிப்படியாக நடத்தப்படும் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

கோட்டை தண்டையார்பேட்டை வட்டம், பெரம்பூர் புரசைவாக்கம் வட்டம், எழும்பூர் நுங்கம்பாக்கம் வட்டம், மயிலாப்பூர் திருவல்லிக் கேணி வட்டம், மாம்பலம்கிண்டி வட்டம் ஆகிய வட்டங்களைச் சேர்ந்த பொதுமக்கள் மனுக்களை அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படு கிறார்கள். உடனடியாக முடிவு செய்ய இயலாத விண்ணப்பங்களுக்கு 30 நாட்களுக்குள் பதில் அளிக்கப்படும்.' என கூறப்பட்டுள்ளது.

English summary
The new scheme amma which assure to help ‘Marginal People in All Villages’, to laungh at chennai tomorrow. This is the name of a new scheme of the State government’s Revenue Department which was inaugurated on February 24, coinciding with the Chief Minister, Jayalalithaa’s birthday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X