புழல் சிறையில் கைதி தூக்கு போட்டு தற்கொலை
சென்னை: போதை பொருள் கடத்தல் வழக்கில் கைதாகி புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த சிறைக்கைதி ஒருவர் இன்று அதிகாலை தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் பாலமேடை சேர்ந்தவர் சங்கர் (வயது49). கடந்த 2011-ம் ஆண்டு போதைப் பொருள் கடத்தல் வழக்கில் சென்னை போலீசார் கைது செய்து புழல் ஜெயிலில் அடைத்தனர். 1-வது பிளாக்கில் உள்ள அறையில் 10 கைதிகளுடன் அடைக்கப்பட்டு இருந்தார்.
நேற்று இரவு மற்ற கைதிகளுடன் சகஜமாக பேசி விட்டு அறையில் தூங்க சென்றார். இந்த நிலையில் இன்று அதிகாலை சிறை கம்பியில் லுங்கியை கயிராக திரித்து சங்கர் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். ரோந்து வந்த சிறை போலீசார் சங்கர் தூக்கில் பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
உடனடியாக சடலத்தை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சங்கரின் தற்கொலைக்கான காரணம் என்ன? என்று தெரியவில்லை. இது தொடர்பாக உடன் இருந்த மற்ற கைதிகளிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இது குறித்து புழல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சமீபத்தில் திகார் சிறையில் இரண்டு கைதிகள் தூக்கு போட்டுக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் தற்போது புழல் சிறையில் கைதி ஒருவர் தற்கொலை செய்த சம்பவம் கைதிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications