அறவழியில் போராடும் மாணவர்களை தாக்குவதா? காவல்துறைக்கு வைகோ கண்டனம்

இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் இதுவரை நடைபெறாத விதத்தில், தமிழக மாணவர்கள், ஈழத் தமிழருக்கு நீதி கேட்டு, அறவழியில் போராடி வருகின்றார்கள். கடந்த 11 நாட்களாக தமிழகத்தில் இலட்சக்கணக்கான மாணவர்கள் துளியும் வன்முறைக்கு இடம் இன்றி, அறவழியில், பசியோடும், பட்டினியோடும் சிங்களக் கொலைகார அரசை எதிர்த்தும் அதற்கு உதவும் இந்திய அரசின் துரோகத்தைத் தடுக்கவும், தமிழ் ஈழ சுதந்திர விடியலுக்கு ஐ.நா. மன்றம் நடவடிக்கை எடுக்கவும் போராடி வருகின்றார்கள்.
இத்தகைய ஒரு அமைதி வழிப் போராட்டம், பிரளயத்தின் எழுச்சியோடு நடக்கிறது.
மாணவர்கள் மீது தடியடி
மதுரையில், ஆயிரக் கணக்கான மாணவர்கள் பேரணியாக மூலக்கரை என்ற இடத்தில் இருந்து முழக்கங்களை எழுப்பியவாறு வந்துகொண்டு இருந்தனர். அப்பொழுது காவல்துறை துணை ஆணையர் திருநாவுக்கரசு என்பவர், மதுரை சட்டக்கல்லூரி மாணவர் அய்யாதுரையைப் பார்த்து, ‘நீதான் போராட்டங்களுக்கு எல்லாம் காரணமாக இருக்கிறாய், உன்னை அடித்தே கொன்று விடுவேன்' என்று கடுமையாக மிரட்டி உள்ளார்.
பேரணியாக வந்த மாணவர்கள், பெரியார் பேருந்து நிலையம் அருகில், அமைதியாக அமர்ந்தபோது, துணை ஆணையர் திருநாவுக்கரசு காவலர்களோடு வந்து, மாணவர் அய்யாத்துரையை அடித்து இழுத்துக்கொண்டு சென்று, முகத்திலும் தலையிலும் தாக்கி உள்ளார். இரத்தக் காயத்தோடு கீழே விழுந்த அய்யாத்துரையின் நெஞ்சில் ஏறி காவல்துறையினர் மிதித்தனர். அய்யாதுரை மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார்.
காட்டுமிராண்டித்தனம் வேண்டாம்
காட்டுமிராண்டித் தனமான இந்த அக்கிரமத்தைச் செய்த காவல்துறை துணை ஆணையர் திருநாவுக்கரசையும், தாக்குதல் நடத்திய காவல்துறையினரையும் உடனடியாக பணி இடைநீக்கம் செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
1965 இல் ஜனவரி 25 ஆம் தேதி மதுரை மாசி வீதியில் மாணவர்கள் தாக்கப்பட்டதின் விளைவாகத்தான் புரட்சி வெடித்தது; இராணுவத்தையும் மாணவர்கள் எதிர்கொண்டனர் என்பது நினைவுபடுத்தும் வரலாறு ஆகும்.
மாணவர்கள் மீது அடக்குமுறையைப் பிரயோகித்த காவல்துறைக்குக் கடும் கண்டனத்தைத் தெரிவிப்பதோடு, விபரீத விளைவுகள் ஏற்படாமல் தடுக்க வேண்டும் எனில், அரசு உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
-
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications