டெல்லியில் +1 படிக்கும் மாணவியை கற்பழித்த சக மாணவர்கள் 4 பேர் கைது
டெல்லி: டெல்லியில் உடன் படிக்கும் மாணவியை கற்பழித்த பிளஸ் 1 மாணவர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
டெல்லி பாவனா பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்கள் திடுக்கிடும் செயலைச் செய்துள்ளனர். அந்த பள்ளியில் பிளஸ் 1 படித்து வரும் 4 மாணவர்கள் 16 வயதாகும் சக மாணவியை கற்பழித்துள்ளனர். கடந்த 13ம் தேதி அந்த 4 பேரில் ஒருவரின் வீட்டுக்கு அந்த மாணவி சென்றுள்ளார். அங்கு வைத்து ஒரு மாணவர் அந்த மாணவியை கற்பழிக்க அதை மற்றவர்கள் தடுக்காமல் சும்மா இருந்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட மாணவி தனது பெற்றோரிடம் தெரிவித்தார். அவர்கள் இது குறித்து போலீசில் புகார் கொடுத்தனர். அவர்களின் புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் 4 மாணவர்களையும் கைது செய்தனர். கைதான அனைவரும் 16 முதல் 17 வயதுடைய மைனர் என்பதால் அவர்கள் சிறார் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில்,
ஒரு மாணவர் அந்த மாணவியை கற்பழிக்க மற்ற 3 பேரும் அங்கிருந்துள்ளனர். ஆனால் குற்றம் நடந்த இடத்தில் இருந்ததால் அந்த 3 பேர் மீதும், கற்பழித்தவர் மீது போடப்பட்டுள்ள அதே பிரிவுகளில் தான் வழக்கு பதிவு செய்துள்ளோம் என்றார்.
அந்த மாணவர்களும், மாணவியும் ஒரே பகுதியில் வசித்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது!












Click it and Unblock the Notifications