திமுக ஆதரவு வாபஸ்- மத்திய அரசு கவிழுமா?- மாயாவதி, முலாயமை நம்பியே எதிர்காலம்!
டெல்லி: காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் இருந்து திமுக வெளியேறியதைத் தொடர்ந்து மத்திய அரசு கவிழுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஜெனிவாவில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையக் கூட்டத்தில் அமெரிக்கா கொண்டு வந்த இலங்கைக்கு எதிரான தீர்மானத்தில் திருத்தங்களை மத்திய அரசு கொண்டு வர திமுக வலியுறுத்தியது. ஆனால் திமுகவின் கோரிக்கையை மத்திய அரசு கண்டு கொள்ளவில்லை. இதனால் மத்திய அமைச்சரவையிலிருந்து வெளியேறுவதாகவும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் இருந்து விலகுவதாகவும் திமுக தலைவர் கருணாநிதி அறிவித்துள்ளார்.
லோக்சபாவில் மொத்த எம்.பிக்களின் எண்ணிக்கை 540. அரசு நீடிப்பதற்கு 270 எம்.பிக்களின் ஆதரவு தேவை. திமுகவின் ஆதரவுடன் மொத்தம் 295 எம்.பிக்கள் ஆதரவு மத்திய அரசுக்கு இருந்தது. தற்போது திமுகவின் 18 எம்.பிக்கள் ஆதரவு விலக்கிக் கொள்ளப்பட்ட நிலையில் மத்திய அரசுக்கான ஆதரவு எம்.பிக்களின் எண்ணிக்கை 277ஆகக் குறைந்துள்ளது.
இதில் அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு தரும் சமாஜ்வாடியின் (22 ) மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி (21) எம்.பிக்களின் எண்ணிக்கையும் அடக்கம்.
இதனால் மத்திய அரசு சிறுபான்மை அரசாக மாறியுள்ளது. சமாஜ்வாடி கட்சியோ அல்லது பகுஜன் சமாஜ் கட்சியோ நினைத்தால் எப்போது வேண்டுமானாலும் 'கவிழ்க்கப்படக்' கூடிய அரசாக மன்மோகன்சிங் அரசு மாறியிருக்கிறது.
ஐமு கூட்டணியில் இருந்து திமுக விலகிய நிலையில் லோக்சபாவில் கட்சிகள் பலம்:
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி
காங்கிரஸ் கட்சி -202
தேசியவாத காங்கிரஸ் - 9
ராஷ்டிரிய லோக்தளம்- 5
மற்ற கட்சிகள் -16
ஐமு கூட்டணிக்கு வெளியில் இருந்து ஆதரவு தரும் கட்சிகள்
சமாஜ்வாடி- 22
பகுஜன் சமாஜ் -21
ராஷ்டிரிய ஜனதா தளம்- 3
மதச்சார்பற்ற ஜனதா தளம்- 3
எதிர்க்கட்சிகள்:
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி -153
இடதுசாரிகளும் இதர கட்சிகளும்- 88
திமுக -18
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா?












Click it and Unblock the Notifications