குளித்தலையில் பல்வேறு அமைப்புகள் இலங்கைக்கு எதிராக தீவிர போராட்டம்
கரூர்: குளித்தலையில் பல்வேறு அமைப்புகள் இலங்கைக்கு எதிராக தீவிர போராட்டம் நடத்தின.
கரூர் மாவட்டம் குளித்தலையில் மத்திய அரசை கண்டித்தும் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கக் கோரியும் தமிழ் வழக்கறிஞர் பேரவையின் உண்ணாவிரதம் போராட்டம் காவல் நிலையம் முன்பாக நடைபெற்றது.
இந்த போராட்டத்தில் தமிழ் வழக்கறிஞர்கள் பேரவை ஒருங்கிணைப்பாளர்கள் மனோகரன், காமராஜ், மது, செல்வகாந்தி மற்றும் வழக்கறிஞர்கள் செந்தில்குமார், நீலமேகம், பரமசிவம், மகுடேஸ்வரன், ராஜீ, மருதூர் திருநாவுக்கரசு, அஜீஸ், தமிழ்செல்வன், பாஸ்கர், சிவகாமசுந்தரி, முனைவர் கடவூர் மணிமாறன், திருச்சி வேலுச்சாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இதே போல் மனு எழுத்தர் கூட்டமைப்பு சார்பாக தொடர் உண்ணாவிரதப் போராட்டம் குளித்தலை காந்தி சிலை முன்பு நடைபெற்றது. அதிமுக சிறுபான்மை பிரிவு எஸ்.ஏ.காதர் மொய்தீன் முன்னிலையில் நடந்த போராட்டத்தில் பொன்னரசு, பானுமதி, தியாகராஜன், மணி, எழில் ஜெயலெட்சுமி, நாகராஜன், பானு, ராமசாமி, நவாப்ஜான், மருதை முத்து, சிவபெருமாள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மேலும் தமிழக மக்கள் முன்னேற்ற கழகமும் குளித்தலை நகரம், ஒன்றியம், தோகைமலை ஒன்றியம் சார்பாக தபால் நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடத்தியது. போராட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் தங்கதுரை தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் இரா. சக்திவேல் ஆர்ப்பாட்டத்தின் நோக்கம் பற்றி விரிவாக பேசினார். ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினர்.
இரும்பூதிப்பட்டியில் உள்ள இலங்கை தமிழர் குடியிருப்பில் 100க்கும் மேற்பட்டோர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர். குளித்தலை பேருந்து நிலையத்தில் பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார்கள்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications