இலங்கையை 'ஊக்கப்படுத்தும்' அமெரிக்காவின் தீர்மானம்!
ஜெனிவா: இலங்கை அரசாங்கமானது நல்லிணக்க ஆணைக் குழு மற்றும் ஐநா மனித உரிமைகள் ஆணையரின் பரிந்துரைகளை நிறைவேற்ற வேண்டும் என்று அமெரிக்காவின் தீர்மானம் வலியுறுத்தியுள்ளது.
ஜெனிவாவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையக் கூட்டத்தில் அமெரிக்கா இன்று தாக்கல் செய்த தீர்மான விவரம்:
27 ஆண்டுகால போர் முடிவுற்ற நிலையில் உண்மையான நல்லிணக்கம், தேவையான பொறுப்பேற்றல், அமைதியை நிலைநாட்டுவதற்கான தேவையான நடவடிக்கைகளை இலங்கை அரசானது மேற்கொள்ள ஊக்கப்படுத்தும் கடந்த ஆண்டு தீர்மானத்தின் அடிப்படையில் தற்போது இந்தத் தீர்மானம் கொண்டு வரப்படுகிறது.
இலங்கையானது நல்லிணக்கத்தையும் பொறுப்பேற்றலையும் ஏற்க அர்த்தமுள்ள நடவடிக்கைகள் அவசியம் என்பதையும் சீர்குலைந்து வரும் மனித உரிமைகள் நிலைமை கவலைக்குரியதாக வளர்ந்து வருகிறது என்பதையும் ஐநா மனித உரிமைகள் ஆணையாளரின் விரிவான அறிக்கை விளக்கியிருக்கிறது.
இலங்கையின் குறிப்பிட்ட சில பகுதிகளில் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதை இந்தத் தீர்மானம் வரவேற்கிறது. இதை ஏற்றுக் கொள்கிறோம். நல்லிணக்கம் மற்றும் பொறுப்பு கூறல் என்பதை நிறைவேற்ற, இலங்கையின் மனித உரிமைகள் மற்றும் சட்டத்தின் ஆட்சி தொடர்பான கவலைகளை எதிர்கொள்ள நல்லிணக்க ஆணைக் குழுவின் பரிந்துரைகளையும் ஐநா மனித உரிமைகள் ஆணையரின் பரிந்துரைகளையும் நிறைவேற்றுவதற்காக இலங்கையை ஊக்கப்படுத்துகிறோம். இந்த முதன்மையாக பணிக்கு உதவி செய்ய அமெரிக்கா தயாராக இருக்கிறது.
மேலும் இவற்றை நடைமுறைப்படுத்த ஐநா மனித உரிமைகள் ஆணையம் தொழில்நுட்ப ரீதியான பங்களிப்பை இலங்கைக்கு வழங்க வேண்டும். சர்வதேச சமூகமானது இலங்கை எதிர்கொண்டுள்ள சவால்களுக்கு உதவ வேண்டும். இந்தத் தீர்மானத்தை மனித உரிமைகள் ஆணையம் ஏற்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications