இனி யாரும் தீக்குளித்து உயிரிழக்க வேண்டாம் வைகோ வேண்டுகோள்
சென்னை: இலங்கைத் தமிழருக்காக யாரும் தீக்குளித்து உயிரினை மாய்த்துக்கொள்ளவேண்டாம் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்ணீர் மல்க வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
தமிழ் ஈழ விடியலுக்காக நேற்று இரவு வானகரத்தில், தமிழக விடுதலை இயக்கத்தினர் நடத்திய பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற விக்ரம் என்ற இளைஞர் தீக்குளித்து தன் உயிரைத் தியாகம் செய்தார் என்ற செய்தி நெஞ்சில் பேரிடியாக விழுந்தது.
சிங்களக் கொடியோர் நடத்திய தமிழ் இனப் படுகொலை தமிழர் இதயங்களில் நெருப்பைப் பற்றவைத்துவிட்டது. இந்தியாவில் எந்த மாநிலத்திலும் நடைபெறாத விதத்தில், தமிழகத்தில் இலட்சோப இலட்சம் மாணவர்கள் ஊண் உறக்கம் துறந்து தங்களை வருத்திக்கொண்டு ஈழ விடியலுக்காக அறப்போர் நடத்துகின்றனர்.
வீரத் தியாகி முத்துக்குமார் வைத்த நெருப்பை இதயத்தில் ஏந்தியவாறு, விக்ரம் தன்னை மரணத் தீயில் பலியிட்டுள்ளார். உயிரோடு இருந்து தமிழ் ஈழ விடியலுக்காக போராட வேண்டிய தமிழர்கள் இப்படி தீக்குளித்து தங்களை மாய்த்துக்கொள்ள வேண்டாம் என்று மன்றாடிக் கேட்டுக்கொள்கிறேன்.
விக்ரம் அவர்களின் தியாக மரணத்தால், கதறித் துடிக்கும் அவரது குடும்பத்தினருக்கும், உற்றார் உறவினருக்கும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கண்ணீர் அஞ்சலியைத் தெரிவித்துக்கொள்கிறேன் இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
-
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications