டெல்லி தலைமைச் செயலகத்திற்கு வெளியே 8 பைகளில் வெடிகுண்டு மூலப் பொருள் கண்டெடுப்பு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: டெல்லி தலைமையச் செயலகத்திற்கு வெளியே 8 பைகளில் வெடிகுண்டு தயாரிக்கத் தேவைப்படும் பொருள் இருந்தது நேற்று இரவு கண்டுபிடிக்கப்பட்டது.

பழைய டெல்லியில் உள்ள ஜும்மா மஸ்ஜித் பகுதியில் இருக்கும் ஒரு கெஸ்ட் ஹவுஸில் இருந்து போலீசார் ஏகே 56 ரக துப்பாக்கி, 3 குண்டுகள், 220 கிராம் வெடிபொருட்கள், டெல்லி வரைபடம், மெமரி கார்டு உள்ளிட்டவற்றை கடந்த சில நாட்களுக்கு முன்பு பறிமுதல் செய்தனர். இதையடுத்து டெல்லியில் தற்கொலைப் படை தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த ஹிஸ்புல் முஜாஹிதீன் தீவிரவாதி செய்யது லியாகத் ஷா(47) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

ஆனால் அவரது கூட்டாளிகள் 2 பேர் டெல்லியில் உள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. கடந்த 20ம் தேதி உத்தர பிரதேச மாநிலம் கோரக்பூரில் கைது செய்யப்பட்ட ஷா கடந்த வியாழக்கிழமை டெல்லி கொண்டு வரப்பட்டார். நீதிமன்றத்தில் ஆஜர்பட்டுத்தப்பட்ட பிறகு அவர் 15 நாள் போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் டெல்லி தலைமைச் செயலகத்திற்கு வெளியே 8 பைகளில் வெடிகுண்டு தயாரிக்கத் தேவைப்படும் பொருள் இருந்ததை கண்டுபிடித்து அவற்றை பறிமுதல் செய்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+