ரூ.20 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்ட மாவோயிஸ்ட் முக்கிய தலைவர் ஆந்திராவில் கைது
ஹைதராபாத்: ஆந்திர மாநிலம் கம்மம் மாவட்டத்தில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவர் சுதர்ஷன் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
ஆந்திர மாநிலம் நல்கொண்டா மாவட்டம் திருமலைகிரி கிராமத்தைச் சேர்ந்தவர் சுதர்ஷன் என்ற ஸ்ரீராமுலு ஸ்ரீனிவாஸ். மாவோயிஸ்ட் அமைப்பின் முக்கிய தலைவர். கடந்த 1999ம் ஆண்டு ஆந்திர உள்துறை அமைச்சர் மாதவ ரெட்டி கொலை மற்றும் 2003ம் ஆம்டு திருப்பதி அருகே அப்போதைய ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை கொலை செய்ய முயன்றது ஆகியவற்றில் சுதர்ஷனுக்கு தொடர்பு உள்ளது என்று கூறப்படுகிறது.
மேலும் கடந்த ஆண்டு ஒரிசா மாநிலம் மால்கன்கிரி மாவட்ட கலெக்டர் வினீல் கிருஷ்ணாவை கடத்தியதிலும் சுதர்ஷனுக்கு தொடர்பு உள்ளது என்று சந்தேகிக்கப்பட்டது.
இதற்கிடையே சுதர்ஷன் தலைக்கு ரூ. 20 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் ஆந்திர மாநில எல்லையில் உள்ள கம்மம் மாவட்டம் வைரா அருகே வைத்து நேற்று சுதர்ஷன் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த தகவலை போலீசார் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications