ஆந்திராவில் 18 வயது பெண் மீது ஆசிட் வீச்சு: கற்பழிக்க முயன்ற காதலன் கைவரிசை
விசாகப்பட்டினம்: ஆந்திராவில் பொறியியல் கல்லூரி மாணவர் ஒருவர் தனது காதலியை கற்பழிக்க முயன்றுள்ளார். அதை எதிர்க்கவே மாணவர் அப்பெண்ணின் மீது ஆசிட் வீசியுள்ளார்.
ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள நரசனபேட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் கணேஷ். பி.டெக் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். அவர் தன் வீட்டுக்கு அருகே வசிக்கும் 18 வயது பெண் கவிதாவை(பெயர் மாற்றப்பட்டுள்ளது) காதலித்தார். இந்த காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவிக்கவே காதல் ஜோடி வீட்டை விட்டு வெளியேறியது.
நேற்று இரவு பீமுனிபட்டினம் பகுதியில் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு கவிதாவை கணேஷ் அழைத்துச் சென்றார். அங்கு அவர் கவிதாவை கற்பழிக்க முயன்றுள்ளார். கவிதா எதிர்க்கவே கணேஷ் தான் வைத்திருந்த ஆசிடை எடுத்து காதலியின் மீது ஊற்றினார். இதில் கவிதாவுக்கு 25 சதவீதம் காயம் ஏற்பட்டது.
கணேஷ் கவிதாவை அங்கேயே விட்டுவிட்டு ஓடிவிட்டார். அப்போது அந்த வழியாகச் சென்றவர்கள் கவிதாவை மீட்டு அடைக்கலம் அளித்தனர். அதன் பிறகு அவர் தனது பெற்றோருக்கு தகவல் கொடுத்தார். அவர்கள் கணேஷ் மீது போலீசில் புகார் கொடுத்தனர். கவிதா கிங் ஜார்ஜ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து போலீசார் கூறுகையில்,
கணேஷ் அந்த பெண்ணை கற்பழிக்க நினைத்துள்ளார். ஒரு பாட்டிலில் ரசாயனத்தையும் தயாராக எடுத்து வந்திருக்கிறார் என்றனர்.
-
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
5 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு; ₹69,000 அடிப்படைச் சம்பளம்... மத்திய அரசு போடும் ஸ்வீட் பிளான்! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்?












Click it and Unblock the Notifications