சமூக வலைத்தளத்தின் சுதந்திரத்தை ஒழுங்குபடுத்துவது அவசியம்: குர்ஷித்
கொல்கத்தா: சமூக வலைதளங்கள் வழங்கும் சுதந்திரத்தை நீங்கள் எவ்வாறு பயன்படுத்துகிறீர்கள்,ஏனென்றால் அனைத்து வகையான சுதந்திரங்களும் ஒழுங்கு படுத்தப்பட வேண்டும் என மந்திரி சல்மான் குர்ஷித் கருத்து தெஅரிவித்துள்ளார்.
மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவில் உள்ள பத்திரிகை ஒன்று 'சுதந்திரமும் சமத்துவமும்' என்ற தலைப்பில் விவாதம் நிகழ்ச்சியை நடத்தியது.
இந்த விவாதத்தில் கலந்து கொண்ட வெளியுறவுத்துறை மந்திரி சல்மான் குர்ஷித் சமூக வலைதளங்கள் குறித்து கூறியதாவது, 'நாம் அனைவரும் சமம் என்பதால் இந்த சமூக வலைதளங்கள் சக்தி மிக்கதாக இருக்கிறது. இது சமூக வலைதளங்கள் வழங்கும் சமத்துவம். அது வழங்கும் சுதந்திரத்தை நீங்கள் எவ்வாறு பயன்படுத்துகிறீர்கள். இந்த சுதந்திரமும் ஒழுங்கு படுத்தப்பட வேண்டிய ஒன்றே. ஏனென்றால் அனைத்து வகையான சுதந்திரங்களும் ஒழுங்கு படுத்தப்பட வேண்டும்.
சமத்துவத்தை யாரும் ஒழுங்கு படுத்துவதில்லை என்று எனக்கு தெரியும். ஆனால் சுதந்திரம் ஒழுங்கு படுத்தப்படுகிறது. இந்திய அரசியலமைப்பை படித்துப்பாருங்கள். நீங்கள் உண்மையான இந்தியனாக இருந்தால், அனைத்து வகை சுதந்திரங்களும் நியாயமான கட்டுபாடுகளுக்கு உட்பட்டதே என்று கூறும் அரசியலமைப்பை மதித்து நடக்க வேண்டும்', இவ்வாறு அவர் கூறினார்.
மேலும், இந்த விவாதத்தில் கூட்டுறவு விவகாரத்துறை மந்திரி சச்சின் பைலட், பாரதீய ஜனதா கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications