தமிழக மாணவர்களுக்கு ஆதரவாக லண்டனில் நடத்தப்பட்ட உண்ணாவிரதம் முடிவு!
லண்டன்: தமிழீழத் தனியரசுக்கான பொதுவாக்கெடுப்பு கோரி தமிழக மாணவர்கள் நடத்தி வரும் போராட்டத்துக்கு ஆதரவாக லண்டனில் 3 பேர் மேற்கொண்ட உண்ணாவிரதப் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது.
தமிழக மாணவர்களுக்கு ஆதரவாகவும் 6 அம்ச கோரிக்கைகளை முன்வைத்தும் லண்டனில் தினேஷ், திராவிடன், தமிழ் தினேஷ் ஆகியோர் சொட்டு நீரும் அருந்தாமல் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர். கடந்த 18ம் தேதி முதல் இவர்களது போராட்டம் நடைபெற்று வந்தது. இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமையன்று இந்தப் போராட்டம் தற்காலிகமாக முடிவுக்கு வந்தது.
இந்தப் போராட்டத்தின் முடிவாக இந்திய தூதரக அதிகாரிகளிடம் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது. அந்த மனுவில், இலங்கை இன அழிப்பு தொடர்பாக சுதந்திரமான சர்வதேச விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும், தமிழீழத்திற்கான பொது வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டும், தமிழர் தாயகத்தின் மீது இலங்கை அரசால் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் மனித உரிமை மீறல்களை தடுக்கும் வகையில் பாதுகாப்புப் பொறிமுறை ஐக்கிய நாடுகள் சபையின் மேற்பார்வையில் உடனடியாக உருவாக்கப்பட வேண்டும்,
இலங்கை படையினரால் கைது செய்யப்பட்டு காணமல் போன போராளிகள் மற்றும் பொதுமக்களின் விவரங்களை உடனடியாக வெளிப்படுத்த வேண்டும், கால வரையறை இல்லாமல் தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட வேண்டும், தமிழர் தாயகமான வடக்கு, கிழக்கு, பகுதிகளில் மேற்கொள்ளப்படும் சிங்களக் குடியேற்றங்கள், அரச படைகளின் அத்துமீறிய நில அபகரிப்புகள், வழிபாட்டுத் தளங்கள் அழிக்கப்படுவது போன்றவை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டிருக்கிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications