ப்ளஸ் டூ தேர்வு எழுத வந்த பாம்பு– பீதியில் ஓடிய மாணவிகள்
உடன்குடி: உடன்குடியில் உள்ள பள்ளியில் தேர்வு அறைக்குள் பாம்பு புகுந்ததால் தேர்வு எழுதி கொண்டிருந்த மாணவிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி பன்டாரசெட்டி விளையில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்டூ தேர்வு நடந்து கொண்டிருந்தது. 3 அறைகளில் 56 மாணவிகள் தேர்வு எழுதி கொண்டிருந்தனர். அப்போது திடீரென தேர்வு நடந்து கொண்டிருந்த ஒரு அறைக்குள் நல்ல பாம்பு ஒன்று புகுந்தது.
இதை பார்த்து அஞ்சிய மாணவிகள் தேர்வு எழுதி கொண்டிருந்ததை விட்டுவிட்டு பீதியில் வெளியே ஓடிவந்தனர். கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஆசிரியர்களும் அந்த அறையை விட்டு ஓட்டம் பிடித்தனர்.
இதையறிந்த பள்ளி தலைமை ஆசிரியர் லீலா சந்திராபாய் மற்றும் பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ்காரர் பாம்பை பிடிக்க முயன்றனர். ஆனால் பாம்பு அங்கிருந்த ஆய்வு கூடத்துக்குள் புகுந்து கொண்டது. இதனால் மாணவிகளும், ஆசிரியர்களும் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
பின்னர் மாணவிகளை தேர்வு எழுத தலைமை ஆசிரியை அழைத்தார். அச்சத்தில் இருந்த மாணவிகள் பாமபு வந்த தேர்வு அறைக்குள் தேர்வு எழுத்த மறுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் பக்கத்து அறையை தேர்வு அறையாக மாற்றி அதில் மாணவிகள் பதற்றத்துடன் தேர்வு எழுதினர். பரிட்சை ஹாலுக்குள் பாம்பு புகுந்த சம்பவம் உடன்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
-
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை












Click it and Unblock the Notifications