தமிழகத்தில் நிலவும் 'தற்காலிக' மின்வெட்டு பிரச்சனை ஜூன் இறுதிக்குள் சரி செய்யப்படும்-நத்தம் விஸ்வநாதன்

பட்ஜெட் மீதான விவாதத்தில் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ. பாலகிருஷ்ணன், மின்வெட்டு பிரச்சனை காரணமாக மாநிலத்தின் வளர்ச்சி 4.6 சதவீதமாக குறைந்துள்ளது. மின்வெட்டு பிரச்சனை 2014 ஆண்டு மார்ச் மாதம் வரை நீடிக்கும் என்று பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது என்றார்.
அப்போது பேசிய நத்தம் விஸ்வநாதன், தமிழ்நாட்டில் ஏற்பட்டு இருக்கும் 'தற்காலிக' மின்வெட்டு பிரச்சனைக்கு அதிமுக அரசு காரணம் அல்ல என்பதை பலமுறை சொல்லிவிட்டோம். அதிமுக ஆட்சிக்கு வந்தபிறகு ஒட்டுமொத்த மின் உற்பத்தி அதிகரித்துள்ளது.
180 மில்லியன் யூனிட்டாக இருந்த தினசரி மின் உற்பத்தியின் அளவு, அரசு எடுத்த பல்வேறு நடவடிக்கைகள், சீரமைப்பு திட்டங்கள் காரணமாக இன்று 220 மில்லியன் யூனிட்டாக உயர்ந்துள்ளது.
தற்போது கோடைகாலம் என்பதால் மின்தேவை அதிகரித்திருக்கிறது. மின் தேவை 11,500 மெகாவாட்டில் இருந்து 12,500 மெகாவாட்டாக கூடியுள்ளது. கடந்த 'ஒருவாரமாக' மின் உற்பத்தியில் சற்று பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
மத்திய அரசின் மின் திட்டங்களாக கைக்கா அனல் மின் நிலையம் மற்றும் கல்பாக்கம் அணு மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக மின் உற்பத்தியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதேபோல், ரேணுகொண்டா அனல் மின் நிலையத்தில் நிலக்கரி பற்றாக்குறை காரணமாக மின் உற்பத்தி குறைந்துள்ளது.
எனவே, மின் உற்பத்தி பின்னடைவுக்கு மத்திய அரசின் மின் திட்டங்களால்தான் காரணமே ஒழிய தமிழக மின் திட்டங்களால் காரணம் அல்ல. வல்லூர் அனல் மின் நிலையத்தில் ஏற்பட்டுள்ள மின்கசிவு இரண்டு மூன்று நாளில் சரிசெய்யப்படும்.
தொடர் நடவடிக்கைகளால் மின் வெட்டு நேரம் படிப்படியாக குறைக்கப்படும். ஜூன் மாத இறுதிக்குள் மின்வெட்டு பிரச்சனை சரிசெய்யப்பட்டுவிடும் என்றார் அமைச்சர்.
-
"அதெப்படி ஒருத்தனை பார்த்தாலே அடிக்கணும்னு தோனும்" மாஸ்டர் மகேந்திரனை வெளுக்கும் மீம்ஸ்! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன்












Click it and Unblock the Notifications