எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு: மையத்தின் பெயர் நீக்கப்பட்டிருந்ததால் தேர்வு எழுத முடியாமல் பரிதவித்த மாணவிக
தேனி: போடியில் உள்ள பங்கஜம் மேல்நிலைப் பள்ளி மையத்தில் இன்று எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுத வந்த 32 மாணவிகள் அவர்களின் தேர்வு மையத்தின் பெயர் நீக்கப்பட்டிருந்ததால் தேர்வு எழுத முடியாமல் தவித்தனர்.
தமிழகம் மற்றும் புதுவையில் இன்று எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு துவங்கியது. 10.5 லட்சத்திற்கும் அதிகமான மாணவ, மாணவியர் தேர்வு எழுதுகின்றனர். தேனி மாவட்டம் போடியில் உள்ள பங்கஜம் மேல்நிலைப்பள்ளி மையத்தில் தேர்வு எழுத இன்று காலை 32 மாணவிகள் வந்தனர். அப்போது தேர்வு மைய குறிப்பு தாளில் அவர்களின் தேர்வு மையத்தின் பெயர் நீக்கப்பட்டிருந்தது. இதனால் அவர்கள் செய்வதறியாது குழம்பினர். தேர்வு மையத்தின் பெயர் இல்லாததால் அதிகாரிகள் அந்த மாணவிகளை தேர்வு எழுத அனுமதிக்கவில்லை. இதனால் அவர்கள் கவலை அடைந்தனர்.
தேர்வு மையத்தின் பெயர் நீக்கம் குறித்து அதிகாரிகளிடம் கேட்டதற்கு, எங்களுக்கு ஒன்றும் தெரியாது, மேலிடத்தில் கேட்க வேண்டும் என்று கூறிவிட்டனர்.












Click it and Unblock the Notifications