சுப்ரீம் கோர்ட்டை மதிக்கிறேன், குறிப்பிட்ட நேரத்திற்குள் சரணடைவேன்: சஞ்சய் தத் கண்ணீர்

Subscribe to Oneindia Tamil

மும்பை: 1993 மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் உச்ச நீதிமன்றம் குறிப்பிட்ட நேரத்திற்குள் சரணடையப் போவதாகக் கூறி கண்ணீர் விட்டார்.

1993 மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்துக்கு தடா நீதிமன்றம் 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. இந்த தண்டனையை 5 ஆண்டுகளாக குறைத்து கடந்த வாரம் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. சஞ்சய் இந்த தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்யலாம் என்றும் கூறப்பட்டது. மேலும் அவர் 4 வரத்திற்குள் சரணடைய வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.

அவர் ஏற்கனவே 18 மாதங்கள் சிறையில் இருந்துவிட்டு ஜாமீனில் வெளியே வந்ததால் 3 ஆண்டுகள் 5 மாதம் சிறையில் இருந்தால் போதும். இந்நிலையில் சஞ்சய் தத்துக்கு பொது மன்னிப்பு வழங்க வேண்டும் என்று பாலிவுட் பிரபலங்கள் உள்பட பலர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் அவர் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

Sanjay dutt
அப்போது அவர் கூறுகையில்,

நான் மன்னிப்பு கேட்டு விண்ணப்பிக்கவில்லை. உச்ச நீதிமன்றத்தின் முடிவை மதிக்கிறேன். நீதிமன்றம் குறிப்பிட்ட 4 வாரத்திற்குள் சரணடைவேன் என்றார்.

இதை கூறிவிட்டு அவர் அருகில் அமர்ந்திருந்த சகோதரி பிரியா தத்தை கட்டிப்பிடித்து அழுதார். பின்னர் அழுது கொண்டே காரில் ஏறிச் சென்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+