நாளைக்குள் குருவாயூர், அனந்தபுரி, குமரி எக்ஸ்பிரஸ் பெட்டிகளை எரிப்போம், அல்லது கழற்றுவோம்: மிரட்டல்

சென்னை எழும்பூர் ரயில் நிலைய மேலாளர் உமா சங்கருக்கு நேற்று ஒரு மிரட்டல் கடிதம் வந்தது.
அந்த கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது,
ஞாயிற்றுக்கிழமை (24ம் தேதி) முதல் வெள்ளிக்கிழமைக்குள் (புனித வெள்ளி) குருவாயூர், அனந்தபுரி, கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில்கள் ஓடிக்கொண்டிருக்கும்போது, பெட்டிகளை தனித்தனியாக கழற்றி விடுவோம், அல்லது தீயிட்டு எரிப்போம். முடிந்தால் தடுத்துப்பார்.
நாங்கள் வியாபாரியாகவோ, திருநங்கையாகவோ, பொதுமக்களாகவோ, போலீசாகவோ வருவோம். ரயில்கள் காட்டுப்பாதைக்குள் வரும் போது எங்கள் திட்டத்தை நிறைவேற்றுவோம். சென்னை வருவதற்குள் கண்டிப்பாக நிறைவேற்றுவோம். தமிழ் வாழ்க, தமிழ் வீரப்படை என்று குறிப்பிட்டிருந்தது.
அந்த கடிதத்தை எழுதியவர் பெயர் செந்தமிழ் அழகன் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த கடிதத்தை படித்த உமா சங்கர் எழும்பூர் ரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணனிடம் இது குறித்து புகார் கொடுத்தார். இதையடுத்து எழும்பூரில் இருந்து தென்மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து ரயில்களிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ரெயில்வே போலீஸ் எஸ்.பி.கயல்விழி கூறுகையில்,
எழும்பூரில் இருந்து புறப்படும் அனைத்து தென்மாவட்ட ரயில்களுக்கும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு ரயிலிலும் ஒரு எஸ்.ஐ., 2 ஆயுதம் ஏந்திய போலீஸ் மற்றும் 2 போலீசார் பயணம் செய்கின்றனர். மேலும் அனைத்து ரயில் நிலையங்களிலும் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். அதிலும் குறிப்பாக கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ரயில்கள் நின்று செல்லும் ரயில் நிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பு பணியில் ரயில்வே பாதுகாப்புபடை போலீசாரும் ஈடுபட்டுள்ளனர் என்றார்.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications