For Daily Alerts
Just In
நிலம் வாங்கித் தருவதாக பண மோசடி: பவர்ஸ்டார் சீனிவாசனுக்கு பிடிவாரண்ட்!

நாமக்கல்லைச் சேர்ந்த வெங்கடாசலத்துக்கு நிலம் தருவதாக ரூ 2 லட்சம் முன்தொகை வாங்கினாராம் பவர்ஸ்டார் சீனிவாசன். ஆனால் நிலம் எதுவும் கிரயம் செய்து கொடுக்கவில்லை.
கொடுத்த பணத்தை திரும்ப கேட்ட போது ஒரு செக்கை நீட்டினாராம் பவர் ஸ்டார். இந்த செக் பணம் இல்லாமல் திரும்பிவிட்டதாம்.
எனவே பவர் ஸ்டார் மீது நீதிமன்றத்தில் பண மோசடி மற்றும் செக் மோசடி வழக்குத் தொடர்ந்தார் சீனிவாசன்.
இந்த வழக்கு நாமக்கல் குற்றவியல் முதன்மை கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி ஜோதி, சீனிவாசனை (பவர் ஸ்டார்) கைது செய்யுமாறு ஜாமீனில் வெளிவராத பிடிவாரண்ட் உத்தரவு பிறப்பித்தார்.