தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அதிரடி- தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மூடல்!

தூத்துக்குடியில் இயங்கி வரும் ஸ்டெர்லைட் எனும் தாமிர உருட்டு ஆலையில் இருந்து கடந்த 23-ந் தேதி வெளியேறிய நச்சு வாயுவால் பொதுமக்கள் சுவாசிக்க முடியாமல் மூச்சுத் திணறலுக்கு உள்ளாகினர். இந்த நச்சுக் காற்றினால் பனித்துளிகள் படர்ந்து இருந்த செடிகள், மரங்களின் இலைகள் பூக்கள் நிறம் மாறி கருகி உதிர்ந்தன.
ஸ்டெர்லைட் ஆலையின் உள்ளேயே பீகார் மாநிலத்தைச் சேர்ந்த கைலாஷ் மேத்தா என்பவர் மயக்கமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதைத் தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆடையை இழுத்து மூடக் கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு முற்றுகைப் போராட்டம் நடத்தப்பட்டது. இதேபோல் ஸ்டெர்லைட் ஆலையை முற்றுகையிட்டு வைகோ, நல்லகண்ணு உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் கடந்த 28-ந் தேதி போராட்டம் நடத்தினர்.
இந்நிலையில் காற்று மற்றும் நீரை மாசுபடுத்தியதற்காக ஸ்டெர்லைட் ஆலையை இழுத்து மூட தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்திருக்கிறது. இதைத் தொடர்ந்து இந்த ஆலைக்கான மின் இணைப்பு துண்டிக்கப்பட்டிருக்கிறது.
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு!












Click it and Unblock the Notifications