ஏப்ரல் 2ம் தேதி ஈழத் தமிழர்களுக்காக உண்ணாவிரதம் இருக்கிறார்கள் நடிகர்கள்

இதுதொடர்பாக நடிகர் சங்கத்தின் தலைவரான சரத்குமாரும், பொதுச் செயலாளரான ராதாரவியும் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தென்னிந்திய நடிகர் சங்கம் மற்றும் தமிழ் கலை உலகின் சார்பாக இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவு தெரிவித்து உண்ணாவிரத அறப்போராட்டம் நடத்தப்படுகிறது.
தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் சரத்குமார் தலைமையில், பொதுச் செயலாளர் ராதாரவி, பொருளாளர் வாகை சந்திரசேகர் முன்னிலையில் இலங்கையில் இனப்போரினால் பாதிக்கப்பட்ட நம் தொப்புள் கொடி உறவுகளான நம் தமிழ் மக்களுக்கு பாதுகாப்பான, சுதந்திரமான நல்வாழ்விற்காக 02.04.2013 அன்று செவ்வாய் கிழமை தி.நகரில் உள்ள அபிபுல்லா சாலையில் உள்ள தென்னிந்திய நடிகர் சங்க வளாகத்தில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது.
இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை, தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம், கில்டு, திரைப்பட இயக்குனர்கள் சங்கம், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் அதில் இணைக்கப்பட்ட தொழிலாளர் சங்கங்கள், விநியோகஸ்தர்கள் சங்கம், திரையரங்க உரிமையாளர்கள் சங்கம், சின்னத்திரை தயாரிப்பாளர்கள் சங்கம், சின்னத்திரை நடிகர்கள் சங்கம், சின்னத்திரை எழுத்தாளர்கள் சங்கம், பி.ஆர்.ஓ.க்கள் சங்கம் ஆகிய அனைத்து சங்கங்களும் இந்த உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொள்கின்றன.
தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் இப்போராட்டத்தில் கலந்து கொள்ளவேண்டும் என்று கூறியுள்ளனர்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications