நொய்டாவில் மீண்டும் பயங்கரம்... ஓடும் காரில் பள்ளி மாணவி கற்பழிப்பு

நொய்டாவில் நோட்டுப் புத்தகம் வாங்குவதற்காக கடைக்கு சென்ற மாணவியை பின் தொடர்ந்த சென்ற மர்ம நபர் மயக்க மருந்தை முகத்தில் அடித்து காரில் கடத்திச் சென்றார்.
பின்னர் ஓடும் காரிலேயே அந்த மர்ம நபர் மாணவியை பலாத்காரம் செய்துவிட்டு சாலை ஓரத்தில் தூக்கிப் போட்டுவிட்டு தப்பிட்டான். அந்த வழியாக சென்ற நபர்கள் சுய நினைவை இழந்து கிடந்த சிறுமியை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இந்நிலையில் மாணவியை பலாத்காரம் செய்த அந்த மர்ம நபரை போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர்.
நொய்டாவில் கடந்த மார்ச் 4ம் தேதி ஓடும் காரில் நான்கு பேர் கொண்ட கும்பல் பள்ளி மாணவியை பலாத்காரம் செய்தது. இதில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர். இரண்டுபேர் தலைமறைவாகிவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதே போல் டெல்லியில் ஓடும் காரில் இளம் பெண்ணை 3 பேர் கொண்ட கும்பல் பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்தது. ஷாப்பிங் மஹாலில் வேலை செய்யும் அந்த பெண், அலுவலக காரில் வீடு திரும்பிய போது இந்த சம்பவம் நடந்துள்ளது.
இதுதொடர்பாக டெல்லி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். பாலியல் குற்றங்களுக்கு எதிராக கடுமையான சட்டங்கள் நிறைவேற்றிய பிறகும் டெல்லியில் பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவதாக பெண்கள் அமைப்பினர் குற்றம்சாட்டியுள்ளனர்.
கடந்த மூன்று மாதத்தில் மட்டும் 350க்கும் மேற்பட்ட பாலியல் வழக்குகள் டெல்லியில் பதிவாகியுள்ளன என்று சமீபத்திய புள்ளி விபரம் அதிர்ச்சிகரமான தகவலை வெளியிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications