நெல்லை அருகே காதல் விவகாரத்தால் 2 கிராமத்தினர் இடையே மோதல்: போலீசார் குவிப்பு
நெல்லை: நெல்லை அருகே காதல் விவகாரம் தொடர்பாக இரண்டு கிராமத்தினர் இடையே மோதல் ஏற்பட்டது.
நெல்லை மாவட்டம் தெற்கு வள்ளியூர் முதல் நிலை ஊராட்சிக்குட்பட்ட கிராமம் அழகப்பபுரம். இங்கு சுமார் 150 வீடுகள் உள்ளன. இந்த ஊரில் உள்ள ஒரு பெண்ணை பக்கத்து ஊரான திருமலாபுரத்தைச் சேர்ந்த ஒரு வாலிபர் காதலித்து வந்துள்ளார். இதன் பொருட்டு அவர் அடிக்கடி அழகப்பபுரம் தெருக்களில் சுற்றியுள்ளார்.
இதனை தட்டிக் கேட்ட அழகப்பபுரத்தைச் சேர்ந்த முதியவரை பைக்கில் வந்த இரண்டு பேர் தாக்கினர். இதனால் இரு கிராமத்தினருக்கும் இடையே கடந்த 26ம் தேதி தகராறு ஏற்பட்டது. இரண்டு ஊரைச் சேர்நதவர்களும் சாமாதனமாக பேசி பிரச்சனையை முடித்தனர். இந்த நிலையில் நேற்று காலை திருமலாபுரத்தைச் சேர்ந்த 50 பேர் கொண்ட கும்பல் கம்பு, அரிவாள், ஈட்டி போன்ற ஆயுதங்களுடன் அழகப்பபுரத்திற்கு சென்று பள்ளிக்கூட தெருவை சேர்ந்த கணேசன் மகன் சுரேஷ், அவரது மனைவி லீலாவதி மற்றும் பால்கனி ஆகியோரை தாக்கினர். இதையடுத்து கிராமத்திலிருந்த பெண்கள் மற்றும் குழந்தைகள் அச்சத்தில் கதவை பூட்டி கொண்டு வீட்டின் உள்ளே இருந்து கொண்டனர். இதனால் ஆத்திரம் அடைந்த கும்பல் கதவுகளில் அரிவாளால் வெட்டி சேதப்படுத்தினர்.
மேலும் 3 வீடுகள், 4 பைக்குளும் சேதப்படுத்தப்பட்டன. ஒருவரது வீட்டிற்குள் புகுந்து பீரோ, நாற்காலி மற்றும் பேருந்து நிலையம் அருகே வைக்கப்பட்டிருந்த ஊர் பெயர் பலகை ஆகியவற்றை அடித்து நொருக்கினர். மற்றொரு வீட்டில் கட்டி வைக்கப்பட்டிருந்த நாயை அடித்துக் கொன்றனர். இது குறித்து அழக்கப்பபுரம் மக்கள் பணகுடி காவல் நிலையத்தில் புகார் செய்தனர். நாங்குநேரி டிஎஸ்பி கோவிந்தராஜ், பணகுடி இன்ஸ்பெக்டர் விஜயகுமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் வன்முறையில் ஈடுபட்டவர்களை பிடிப்பதற்காக திருமலாபுரம் சென்றனர். அப்போது கல் வீசப்பட்டதில் டிஎஸ்பியின் கார் கண்ணாடி உடைந்தது.
இது தொடர்பாக திருமலாபுரம் பஞ்சாயத்து தலைவர் குணசேகரன் உள்பட 28 பேர் மீது வழக்குப் பதிவு செய்து சுயம்புலிங்கம், சமுத்திரபாண்டி, நெல்சன், பாலகிருஷ்ணன், பாலவேசமுத்து, பாலன் உள்பட 6 பேரை கைது செய்தனர். எஞ்சியவர்களை தேடி வருகின்றனர். பதற்றம் நிலவுவதால் 2 கிராமங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications