மியான்மரில் 50 ஆண்டுகளுக்குப் பின் தனியார் நாளிதழ்கள் இன்று வெளியாகின!!

1964-ம் ஆண்டு நீவின் என்பவரது சர்வாதிகார ஆட்சியில் தனிநபர்களின் வர்த்தகம் அனைத்தும் தேசியமயமாக்கப்பட்டது. இதில் பத்திரிகைகளும் அடக்கம். அரசாங்கமே நாளிதழ்களை நடத்தி வந்தது. நூற்றுக்கணக்கான வார இதழ்கள் விளையாட்டு, பொழுதுபோக்கு, சுகாதாரம் போன்றவற்றை மையமாக வெளி வந்து கொண்டிருக்கின்றன.
கடந்த சில ஆண்டுகளாக மியான்மரில் ஜனநாயக நடைமுறைகள் அனுமதிக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக 2 ஆண்டுகளுக்கு முன்பு ஏஎஃபி செய்தி நிறுவனம் தமது கிளையை யாங்கூனில் அமைத்தது. இதன் பின்னர் இன்று ஏப்ரல் 1-ந் தேதி முதல் தனியார் நாளிதழ்கள் வெளியிட அனுமதி அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இன்று நாளிதழ்கள் வெளியாகியிருக்கின்றன. 1960களுக்குப் பின் பிறந்தவர்களுக்கு தனியார் நாளிதழ்கள் எப்படி இருக்கும் என்ற ஆர்வத்தால் அவை விறுவிறுவென விற்றுத் தீர்ந்திருக்கின்றன.
அந்நாட்டின் ஆளும் கட்சி சார்பில் தி யூனியன், பிரபல தி வாய்ஸ் வார இதழின் சார்பில் வாய்ஸ் டெய்லி, தி ஸ்டாண்டர்ட் டைம் டெய்லி, கோல்டன் ஃப்ரெஸ் லேண்ட் ஆகிய 4 நாளிதழ்கள் இன்று வெளியாகி இருக்கின்றன.
கோல்டன் ஃப்ரெஸ் லேண்ட் நாளிதழ் 80 ஆயிரம் பிரதிகளை அச்சிட்டதாகவும் அவை அனைத்துமே விற்றுத் தீர்ந்ததால் ஆனந்த கண்ணீர் வடிக்கிறேன் என்று அதன் தலைமை செய்திஆசிரியரான 81 வயது கின் மெளங் லாய் கருத்து தெரிவித்திருக்கிறார்.இவர்தான் பர்மிய மொழி மூத்த பத்திரிகையாளராக கருதப்படுகிறவர்.1964-ம் ஆண்டு மோக்யோ என்ற பர்மிய நாளிதழில் பணியாற்றியிருந்தார். இந்த அரை நூற்றாண்டுகாலமாக இந்த ஒரு தருணத்துக்காகவே தாம் காத்திருந்தேன் என்றார் அவர். மேலும் பல நிறுவனங்களும் நாளிதழ்களை வெளியிட முன்வந்திருக்கின்றன.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications