அழகிரியை சமயம் பார்த்து நெருக்கும் ஸ்டாலின்.. 15 ஆதரவாளர்களுக்கு நோட்டீஸ்!

திமுகவில் ஸ்டாலினின் கை நாளுக்கு நாள் ஓங்கி வருகிறது. அழகிரி ஒடுக்கப்பட்டு வருகிறார். அவரைச் சுற்றியிருந்த பலரும் ஸ்டாலின் அணிக்கு மாறிவிட்டனர். இப்போது 2 மாவட்டச் செயலாளர்கள் மட்டுமே அழகிரிக்கு ஆதரவாக உள்ளனர். அவர்களும் விரைவில் அணி மாற வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.
இவ்வாறு கிட்டத்தட்ட தனித்துவிடப்பட்டுள்ள அழகிரிக்கு மேலும் சோதனைகளை கட்சித் தலைமை தர ஆரம்பித்துள்ளது.
கடந்த மாதம் 30ம் தேதி மதுரை கோரிப்பாளையத்தில் ஸ்டாலின் பிறந்த நாள் பொதுக்கூட்டம் நடந்தது. அதில் கட்சியின் துணை பொதுச் செயலாளரான துரைமுருகன் பேசினார். ஆனால், இந்தக் கூட்டத்தை அழகிரி ஆதரவாளர்கள் புறக்கணித்துவிட்டனர்.
இந் நிலையில் "கட்சி தலைமை முறையாக அறிவித்தும், இந்தக் கூட்டத்தில் ஏன் பங்கேற்கவில்லை' என்று விளக்கம் கேட்டு மதுரை அவைத் தலைவர் இசக்கிமுத்து, நகர் துணை செயலர்கள் உதயகுமார், சிவக்குமார், சின்னம்மாள் உள்ளிட்ட 15 பேருக்கு, திமுக அமைப்பு செயலாளர் இளங்கோவன் கையெழுத்திட்ட கடிதம் நேற்று கூரியர் மூலம் அனுப்பப்பட்டுள்ளது.
அதில், "ஸ்டாலின் பிறந்த நாள் பொதுக்கூட்டத்திற்கு முன், நகர் திமுக சார்பில் ஒட்டிய போஸ்டர்களில் உங்கள் பெயர் இடம் பெற்றிருந்தது.
மேலும், கூட்டம் நடப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன் நகர் நிர்வாகிகளால் உங்களது மொபைல் எண்களில் தொடர்பு கொண்டு அழைப்பும் விடுக்கப்பட்டது. இருந்தும், கூட்டத்தை புறக்கணித்துள்ளீர்கள். இது, கட்சி கட்டுப்பாட்டை மீறிய செயல். கடிதம் பெற்ற ஒரு வாரத்திற்குள் விளக்கம் அளிக்க வேண்டும். தவறினால் உங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று கூறப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் குறித்து இன்று தனது ஆதரவாளர்களுடன் அழகிரி விவாதிக்கவுள்ளதாகத் தெரிகிறது.
அழகிரி ஆதரவாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்படுவது இது இரண்டாவது முறையாகும். இளைஞர் அணி நேர்காணல் நடத்த ஸ்டாலின் மதுரை வந்தபோது கூட்டத்தை புறக்கணித்த, 17 பேருக்கு, ஏற்கனவே விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டு அதில் அவைத் தலைவர் இசக்கிமுத்து கட்சியில் இருந்தே நீக்கப்பட்டதும், பின்னர் அழகிரியின் அனத்தலால் மீண்டும் கட்சியில் சேர்க்கப்பட்டதும், மற்றவர்களின் விளக்கத்தை கட்சி ஏற்றுக் கொள்வதாக அறிவித்ததும் நடந்தது.
ஆனால், இந்த முறை இவர்களது விளக்கம் சரியாக இல்லாவிட்டால் கட்சியை விட்டு நீக்கப்படுவது நிச்சயம் என்று தெரிகிறது.
எந்த அதிகாரமும் இல்லாமல், கிரானைட் விவகாரம், உர விவகாரம் என மாட்டிக் கொண்டு முழித்து வரும் அழகிரியை இந்த நேரத்தில் ஒடுக்காவிட்டால் பின்னால் கஷ்டம் என ஸ்டாலின் நினைப்பதாகத் தெரிகிறது. இதனால், போட்டுத் தாக்கி வருகிறார்.
இந்த 15 பேரையும் கட்சியை விட்டு நீக்கினால் மற்ற அழகிரி அடிப்பொடிகளும் அணி விட்டு அணி தாவி தன் பக்கம் வந்துவிடுவர் என ஸ்டாலின் நினைப்பதாகத் தெரிகிறது.
இந்த நடவடிக்கைகளுக்கு திமுக தலைவர் கருணாநிதியின் முழு ஆதரவும் இருப்பதாகவும் தெரிகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications