பிப்ரவரியில் டீசலின் விற்பனை 2% சரிவு

Subscribe to Oneindia Tamil

Diesel sales drop 2% in Feb.
மும்பை: டீசல் விலை நிரந்தரமானதாக இல்லாமல் அடிக்கடி மாறுவதால் கடந்த பிப்ரவரி மாதம் டீசலின் விற்பனை 2% சரிவை சந்தித்துள்ளது.

நாட்டின் எரிபொருள் விற்பனையில் டீசலின் பங்கு 50%க்கும் அதிகமாக இருக்கிறது. ஆனால் கடந்த பிப்ரவரி மாதம் டீசல் விற்பனை 2% சரிவை சந்தித்துள்ளது. கடந்த 2 ஆண்டுகளுக்குப் பிறகு ஏற்பட்டிருக்கும் சரிவு இது.

மோட்டார் வாகனங்கள் விற்பனை குறைந்துள்ளது ஒரு காரணமாக சுட்டிக்காட்டப்படுகிறது. இருப்பினும் அண்மைக் காலமாக டீசல் விலை நிர்ணயத்தில் அரசு கட்டுப்பாடுகள் ஓரளவு தளர்த்தப்பட்டு விட்டதால் விலை அதிகரித்து வருகிறது.டீசலை மொத்தமாக கொள்முதல் செய்யும் பல நிறுவனங்கள் கையிருப்பு அதிகம் வைப்பதை குறைக்கவும் தொடங்கியிருக்கின்றன.

டீசல் விலை நிலவரத்தில் காணப்படும் நிலையற்ற தன்மையும் மற்றொரு காரணமாக சொல்லப்படுகிறது. மொத்த விற்பனையில் ஒரு லிட்டர் டீசல் விலை சில்லறை விற்பனை விலையை விட மிகவும் அதிகமாக உள்ளது. இதனால் பிப்ரவரி மாதத்தில் டீசல் மொத்த விற்பனை 40% . டீசல் விலை அதிகமாக இருப்பதால் பலர் ஜெனரேட்டர்களில் டீசலுக்கு பதிலாக பர்னேஸ் ஆயிலை பயன்படுத்தியும் வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+