ஹெலிகாப்டர் ஊழல் வழக்கு: மாஜி தளபதி தியாகி, உறவினர்கள் தேடப்படும் குற்றவாளிகள்- சிபிஐ

இந்திய விவிஐபிக்கள் பயணம் செய்ய இத்தாலி நிறுவனத்துடன் செய்யப்பட்ட ஒப்பந்தத்தில் ரூ. Rs 3,600 கோடி ஊழல் நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக இத்தாலியில் பின் மெக்கானிக்கா நிறுவனத்தின் தலைவரும், அகஸ்டா வெஸ்ட்லாண்ட் நிறுவனத்தின் தலைவரும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் ரூ. 3600 கோடி ஹெலிகாப்டர் பேரத்தில் இந்தியாவைச் சேர்ந்தவர்களுக்கு ரூ. 360 கோடி லஞ்சம் கொடுத்ததாக அசிர்ச்சியூட்டும் தகவலை வெளியிட்டனர்.
இந்த விவகாரம் குறித்து சிபிஐ விசாரித்து வருகிறது. விசாரணையில் இந்திய விமானப் படையின் முன்னாள் தளபதி தியாகி லஞ்சம் வாங்கியது உறுதியானது. ஆனால் அவர் எவ்வளவு லஞ்சம் வாங்கினார், எப்படி வாங்கினார் என்பது இன்னும் தெரியவில்லை. இந்நிலையில் கடந்த 13ம் தேதி தியாகி அவரது உறவினர்கள் சஞ்சீவ் தியாகி என்ற ஜூலி தியாகி, ராஜீவ் தியாகி மற்றும் சந்தீப் தியாகி உள்பட 8 இந்தியர்கள் மற்றும் 5 வெளிநாட்டவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் தியாகி, அவரது உறவினர்கள் 3 பேர் மற்றும் 4 பேர் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் இந்தியாவை விட்டு வெளியேறுவதை தடுக்க எல்லையில் உள்ள அனைத்து சோதனைச்சாவடிகளுக்கும் தேடப்படும் குற்றவாளிகள் நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய கிடோ ரால்ப், கார்லோ வாலன்டினோ பெர்டினான்டோ கெரோசா மற்றும் கிறிஸ்டியன் மிஷல் ஆகிய 3 பேரை பிடிக்க இன்டர்போலின் உதவியை நாடவிருக்கிறது சிபிஐ.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications