Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திமுகவை பின்பற்றி சேதமடைந்த 10ம் வகுப்பு விடைத் தாள்களுக்கு மதிப்பெண்: அமைச்சர் வைகைச் செல்வன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: 10ம் வகுப்பு விடைத்தாள்களில் சேதமடைந்தவைக்கு மதிப்பெண் வழங்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் வைகைச் செல்வன் தெரிவித்தார். மேலும் மாயமான விடைத்தாள்களுக்கு மறுதேர்வு நடத்தலாமா என்று முதல்வருடன் பரிசீலித்து வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

சட்டசபையில் இன்று சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. பொது தேர்வில் வினாத்தாள் குறைபாடு, தேர்வுக்கு முன்பே வினாத்தாள் வெளியானது, போக்குவரத்தின்போது விடைத்தாள்கள் சேதமடைந்தது, மாயமானது குறித்து க. அன்பழகன் (திமுக), பிரின்ஸ் (காங்கிரஸ்), டாக்டர். கிருஷ்ணசாமி (புதிய தமிழகம்), பாலகிருஷ்ணன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி), ஜவாஹிருல்லா (மனித நேய மக்கள் கட்சி) ஆகியோர் தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர்.

அதற்கு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் வைகைச் செல்வன் பதில் அளித்து பேசியதாவது,

கடந்த 2ம் தேதி நடந்த 10ம் வகுப்பு ஆங்கிலம் இரண்டாள் தாள் வினாத் தாளில் பிரிவு-1 வினா எண் 3 டி-ல் லூனல் என்ற வார்த்தைக்கு பதில் லன்ஞ் என்று அசிட்டப்பட்டிருந்தது. இந்த கேள்விக்கு மதிப்பெண் வழங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதே போன்று 10 வகுப்பு தமிழ் இரண்டாம் தாள் வினாத்தாளில் 38வது வினாவிற்கு மாணவர்கள் பதில் அளிக்க முயன்றிருந்தாலே முழு மதிப்பெண் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த வினாவிற்கான வங்கி சலான் இணைக்கப்படாத விபரமே தேர்வு அன்று காலை 9.45 மணிக்கு தான் தெரிய வந்தது. இதையடுத்து 10.30 மணிக்குள் அனைத்து தேர்வு மையங்களுக்கு தகவல் தெரிவித்து வங்கி சலானில் பூர்த்தி செய்யும் விபரங்களை 1,2 என்று குறிப்பிட்டு எழுதுமாறு மாணவர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது.

எனவே இந்த வினாவுக்கு பதில் எழுத முயற்சி செய்திருந்தாலே முழு மதிப்பெண் அளிக்கப்படும். பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு தேர்வுகளுக்கான வினாத்தாள்கள் எங்கு அச்சடிக்கப்படுகிறது என்பதே தெரியாமல் ரகசியமாக அச்சடிக்கப்படுகிறது. தேர்வு அன்று காலை 9.45 மணிக்கு தான் வினாத்தாள் கட்டு பிரிக்கப்படும். அதனால் அப்போது தான் வினாத்தாளில் உள்ள தவறு தெரிய வரும்.

வங்கி சலானை மாணவர்கள் வரைந்திருந்தாலும் அதற்கு மதிப்பெண் கொடுக்கப்படும். பிளஸ் 2, 10ம் வகுப்பு வினாத்தாள்கள் தேர்வுக்கு முன்பாக வெளியாகவில்லை. விடைத்தாள்கள் திருத்தும் மையத்திற்கு அஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்படும் முறை கடந்து 30 ஆண்டுகளாக அமலில் உள்ளது.

விருத்தாச்சலம் ரயில் நிலையத்தில் ரயில் திரும்பும்போது 357 விடைத்தாள்கள் அடங்கிய கட்டு கீழே விழுந்ததில் 240 விடைத்தாள்களுக்கு எந்திவித சேதமும் இல்லை. ஆனால் 54 விடைத்தாள்கள் லேசான சேதமும், 63 விடைத்தாள்கள் மோசமான சேதமும் அடைந்துள்ளன.

திமுக ஆட்சியில் 2008ம் ஆண்டில் வேலூர் மாவட்டத்தில் 220 விடைத்தாள்கள் தீ விபத்தில் சேதம் அடைந்தன. அப்போது மாணவர்களின் நலன் கருதி எடுக்கப்பட்ட நடவடிக்கையை முன் உதாரணமாகக் கொண்டு தற்போது நடந்த சம்பவத்திலும் சேதமடைந்த தமிழ் இரண்டாம் தாள் 63 விடைத்தாள்களுக்கு தமிழ் முதல் தாளில் பெறப்படும் மதிப்பெண்கள் அளிக்கப்படும்.

கடந்த 1ம் தேதி ஆங்கிலம் முதல் தாள் விடைத்தாள்கள் 221 இருந்த 2 கட்டுகள் செஞ்சியில் தொலைந்துள்ளது. இந்த 2 சம்பவத்திற்கும் அஞ்சல் துறையின் மெத்தனம் தான் காரணம் என்று கண்டறிந்து மறுதேர்வு வைக்கலாமா என்று முதல்வருடன் பரிசீலித்து வருகிறோம். இது குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும்.

மாயமான விடைத்தாள்களை கண்டுபிடிக்க நடிவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சம்பந்தப்பட்ட அலுவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் நலன் மற்றும் மனநிலையை கருத்தில் கொண்டு அரசு நடவடிக்கை எடுத்து மாணவர்களுக்கு பாதகம் இல்லாமல் மதிப்பெண் வழங்கும் என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+