அர்ஜெண்டினாவில் பேய்மழை... வெள்ளத்தில் சிக்கி 57 பேர் பலி

Subscribe to Oneindia Tamil

பியுனெசரஸ்: அர்ஜெண்டினாவில் கொட்டிய கனமழையினால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு குடியிருப்புகள் அடித்துச் செல்லப்பட்டன. வெள்ளநீரில் சிக்கி 57 பேர் உயிரிழந்துள்ளதாக அங்கிருந்து வெளியாகும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அர்ஜெண்டினாவின் பியுனெசரஸ் மாகாணத்தில் சில நாட்களாக பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஆற்றில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு லா ப்ளாட்டா மற்றும் தலைநகர் பியுனெசரஸ் நகரங்கள் மூழ்கின.

மக்கள் வீடுகளுக்கு இருக்க முடியாமல் வீட்டுக் கூரைகள், மரத்தின் மீதும் ஏறிக்கொண்டனர். இருந்தும் 50க்கும் மேற்பட்டோர் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டு இறந்து போயினர். ஏராளமானோரை காணவில்லை. அவர்களை தேடும் பணியில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.

ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். மின்சாரம், தகவல் தொடர்பு தடைபட்டுள்ளது. அவர்களை மீட்புக்குழுவினர் மீட்டு முகாம்களில் தங்கவைத்துள்ளனர். அவர்களுக்கு தேவையான உதவிகளை அதிகரிகள் செய்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+