2 மாணவிகளை பலாத்காரம் செய்த பஸ் டிரைவர் உள்பட 3 பேர் கைது
கடலூர்: கடலூரில் 2 பள்ளி மாணவிகளை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்த பஸ் டிரைவர் உள்ளிட்ட 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.
கடலூர் திருப்பாதிரிப்புலியூர் மாவட்டிப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ரேவதி, கஸ்தூரி. இருவரும் கடலூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 9வது வகுப்பு படிக்கின்றனர். தினசரி மினி பஸ்சில் இருவரும் பள்ளிக்குச் செல்வது வழக்கம்.
அந்த பஸ்சின் டிரைவரான கலியபெருமாளுடன் இரு மாணவிகளுக்கும் பழக்கம் ஏற்பட்டது. தினசரி அதே பஸ்சில் போனதால் வந்த வினை இது. இந்த நிலையில், இரு மாணவிகளையும் தனியாக அழைத்துச் சென்ற கலியபெருமாள், தனது நண்பர்களான கொத்தனார் சிலம்பரசன், லாரி டிரைவர் சக்திவேல் ஆகியோரிடம் அறிமுகப்படுத்தி வைத்தார்.
தினசரி பள்ளி முடிந்ததும் ஐந்து பேரும் சந்தித்து பேசி பழகி வந்துள்ளனர். இந்த நிலையில் 2 நாட்களுக்கு முன்பு இரவில், கலியபெருமாள், சிலம்பரசன், சக்திவேல் ஆகிய 3 பேரும் மாவட்டிப்பாளையம் கிராமத்திற்கு சென்று இரு மாணவிகளையும் சந்தித்தனர். பின்னர் இரு மாணவிகளின் மனதையும் கலைத்து அருகில் உள்ள ஏரி நிலத்திற்குக் கூட்டிச் சென்றனர். அங்கு உறவு கொள்ளலாம் என வலியுறுத்தியுள்ளனர். அதற்கு மாணவிகள் மறுத்ததாக தெரிகிறது. இதையடுத்து இருவரையும், 3 பேரும் பலாத்காரம் செய்துள்ளனர்.
இதைப் பார்த்து விட்ட சிலர் அவர்கள் ஐந்து பேரையும் மடக்கிப் பிடித்து காவல் நிலையம் கொண்டு சென்று ஒப்படைத்தனர். போலீஸார் கலியபெருமாள் உள்ளிட்ட 3 பேரையும் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கூடா நட்பு கேடாகத்தான் முடியும்.












Click it and Unblock the Notifications