ஜெயலலிதாவின் பேச்சு எங்கள் மன அமைதியைக் குலைப்பதாக உள்ளது: இலங்கை அரசு
கொழும்பு: இலங்கையை நட்பு நாடாக கருத வேண்டாம் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தி இருந்தார். இந்நிலையில் இத்தகைய கோரிக்கைகள் தங்கள் மன அமைதியை குலைப்பதாக உள்ளது என்று இலங்கை அரசு தெரிவித்துள்ளது.
இலங்கையை நட்பு நாடு என்று அழைக்கக் கூடாது என்று கடந்த 27ம் தேதி தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும், பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. இந்த தீர்மானங்களுக்கு இலங்கை அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இது குறித்து இலங்கை வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
இலங்கையை நட்பு நாடாக கருதக்கூடாது என்ற சிலரின் கோரிக்கைகள் மன அமைதியை குலைப்பதாக உள்ளன. இந்திய-இலங்கை நட்புறவுக்கு இவை ஏற்றதாக இல்லை.
தேவையற்ற மிகைப்படுத்தப்பட்ட மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளை கூறுபவர்கள், இலங்கையின் எதிர்காலத்துக்கு தீர்வாக அர்த்தமற்ற கோரிக்கைகளை எழுப்புபவர்கள் என அனைவரையும் இலங்கைக்கு நேரில் வந்து பார்க்குமாறு அழைப்பு விடுக்கிறோம். தேசத்தை மறுகட்டுமானம் செய்யும் பணியில் எவ்வளவு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்பதை அவர்கள் நேரில் பார்க்கட்டும்.
தமிழ்நாட்டில் இலங்கைக்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டங்கள் தேவையற்றவை. மேலும், வெளிநாடுகளில் வசித்து வரும் இலங்கை தமிழர்கள் சிலர் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருவது வருத்தம் அளிக்கிறது. இலங்கை தமிழர்களுக்கு அரசியல் உரிமை பெற்றுத்தருவது என்ற போர்வையில், அவர்கள் இலங்கைக்கு எதிரான கோரிக்கைகளை எழுப்பி வருகின்றனர். எங்களை பொறுத்தவரை, மனித உரிமை மீறல் புகார்கள் எல்லாம், வதந்தி மற்றும் தவறான தகவல்கள் அடிப்படையில் கூறப்படும் குற்றச்சாட்டுகள் ஆகும்.
எல்லை தாண்டி வரும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை தாக்குவதாக வெளியாகும் தகவல்களும் தவறானவை. அவற்றில் எந்த உண்மையும் இல்லை. எல்லை தாண்டி வரும் தமிழக மீனவர்களை மனிதாபிமான முறையில் நடத்துமாறு இலங்கை கடற்படைக்கு கண்டிப்பான உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications