காதலர்கள் உடலுறவு கொள்வது பாலியல் குற்றமாகாது.. வாலிபரை விடுவித்து டெல்லி கோர்ட் தீர்ப்பு
டெல்லி: திருமணத்துக்கு முன் பெண்ணின் விருப்பத்தோடு உறவில் ஈடுபடுவது பாலியல் பலாத்காரம் ஆகாது என்று டெல்லி கோர்ட் தீர்ப்பளித்துள்ளது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட வாலிபருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
டெல்லியை சேர்ந்த ரகு மற்றும் உஷா, கடந்த 2006ம் ஆண்டு முதல் காதலித்து வந்தனர். அப்போது உஷாவை திருமணம் செய்துகொள்வதாக கூறிய ரகு பலமுறை உறவில் ஈடுபட்டார். ஆனால் இதுவரை உஷாவை, ரகு திருமணம் செய்யாமல் ஏமாற்றியுள்ளார்.
இதுகுறித்து போலீசில் உஷா புகார் செய்தார். வழக்கு பதிவு செய்த போலீசார், கடந்த 3ம் தேதி ரகுவை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை நேற்று முன்தினம் கூடுதல் செசன்ஸ் நீதிபதி வினய்குமார் கன்னா முன் வந்தது.
அப்போது ரகு தரப்பில் வாதாடிய வழக்கறிஞர் பாலக் முகமது மியோ கூறியதாவது:
ரகுவும், உஷாவும் ஒருவரை ஒருவர் காதலித்து வருகின்றனர். டிரைவர் வேலை செய்து வரும் ரகு, உஷாவின் விருப்பத்தினாலேயே உடலுறவு கொண்டுள்ளார். ஆனால் திருமணம் செய்துகொள்ள காலதாமதம் செய்ததால், உஷா சந்தேகமடைந்து ரகு மீது போலீசில் புகார் செய்துள்ளார். ஆனால் போலீசார்தான் ரகு மீது பலாத்கார வழக்கு போட்டுள்ளனர். எனவே ரகுவுக்கு ஜாமீன் வழங்க வேண்டும்' என்று கேட்டார்.
இதையடுத்து நீதிபதி, ‘உஷாவை பலாத்காரம் செய்ததாக ரகு மீது சுமத்தப்பட்ட குற்றத்தில், உஷாவின் விருப்பமின்றி அவர் உறவில் ஈடுபட்டதாக தெரியவில்லை. எனவே அதனை பலாத்கார வழக்காக கருத முடியாது. எனவே ரூ.25,000 பிணைத்தொகை செலுத்திய பின் ரகுவை ஜாமீனில் விட அனுமதிக்கிறேன்‘ என்றார். இதையடுத்து கைது செய்யப்பட்ட ரகு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications