சித்தேரி வரப்போகுதா? அய்யயோ என்ன நடக்குமோ? பயணிகளை திகிலடைய வைக்கும் தொடர் விபத்துகள்!
சென்னை: சித்தேரி அருகே ரயில் விபத்து என்பது அடிக்கடி ஊடகங்களில் இடம்பெறக் கூடிய விஷயமாகிவிட்டதால் அந்த ரயில் நிலையத்தை கடக்கும் போது மரண பீதியுடன் தான் பயணிக்க வேண்டியிருக்கிறது என்கின்றனர் பயணிகள்.
சென்னையிலிருந்து சுமார் 85 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் அரக்கோணம் ரயில் மார்க்கம் வழியாகத்தான் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து கோயம்புத்தூர், பெங்களூர், திருவனந்தபுரத்துக்கு ரயில்கள் செல்கின்றன. இந்த பாதையில் சித்தேரி அருகேதான் அடுத்தடுத்த விபத்துகள், உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன.

10 பேரை பலிகொண்ட விபத்து
2011-ம் ஆண்டு செப்டம்பர் 13-ந் தேதி செவ்வாய்க்கிழமை இரவு 9.45 மணியளவில் அரக்கோணம் ரயில் நிலையத்தை அடுத்த சித்தேரி அருகே சிக்னலுக்காக நின்று கொண்டிருந்த காட்பாடி பாசஞ்சர் ரயில் மீது பின்னால் வந்த மேல்மருவத்தூர்-வேலூர் விரைவு பாசஞ்சர் ரயில் மோதியது. இதில் 10 பேர் பலியாகினர். 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்த விபத்து நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

மீண்டும் சித்தேரியிலேயே விபத்து
தற்போதும் அதே சித்தேரி அருகே இன்று காலை பெங்களூர் நோக்கி சென்ற எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு 4 பேர் பலியாகியுள்ளனர். 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்திருக்கின்றனர்.

சித்தேரின்னாவே அச்சம்
இந்த பெரும் சம்பவங்கள் மட்டுமின்றி சித்தேரி அருகே தொடர்ந்து அடிக்கடி சிறு சிறு ரயில் விபத்துகள் நடைபெற்று வருவதாகவும் பயணிகள் கூறுகின்றனர். தொடர்ச்சியாக சித்தேரி அருகே விபத்துகள் நடைபெற்று வரும் நிலையில் ரயில்வே நிர்வாகம் அலட்சியமாக இருந்து வருவதாகவும் பயணிகள் குற்றம்சாட்டி வருகின்றனர். இதனால் ஒவ்வொருமுறையும் சித்தேரியை கடக்கும் போதும் ஒரு வித உயிர் பயத்துடனேயே பயணிக்க வேண்டியிருக்கிறது என்கின்றனர்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications