தமிழ்நாடு தனி நாடாவதை ஆதரிப்பீர்களா?.. அமெரிக்காவிடம் கேட்ட திமுக!
சென்னை: இந்தியாவிலிருந்து பிரிந்து தனி நாடாக வேண்டும் என்று தமிழ்நாடு முடிவு செய்தால் அதை அமெரிக்கா ஆதரிக்குமா என்று அப்போதைய அமெரிக்கத் தூதரிடம், அப்போது திமுக அமைச்சரவையில் தொழிலாளர் மற்றும் வீட்டு வசதித்துறை அமைச்சராக இருந்த கே.ராஜாராம் கேட்டதாக விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ள அமெரிக்க தூதரக கடிதத் தகவல் பரிமாற்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் எமர்ஜென்சி அமல்படுத்தப்பட்டிருந்த காலகட்டத்தில் இந்தக் கேள்வியை அமெரிக்க தூதரிடம் கேட்டுள்ளார் ராஜாராம்.
இதுகுறித்த விவரம் 1975ம் ஆண்டு ஜூலை 3ம் தேதி அமெரிக்க வெளியுறவு அமைச்சகத்திற்கு சென்னை துணைத் தூதரகத்திலிருந்து அனுப்பப்பட்ட ரகசியக் கடிதத்தில் இடம் பெற்றுள்ளது.
அதன் விவரம்...

ராஜாராம் கேட்டது என்ன?
ஒரு வேளை, இந்தியாவிலிருந்து தமிழ்நாடு தனியாகப் பிரிந்து தனி நாடாக விரும்பினால், அந்த முடிவை எடுத்தால், அதை அமெரிக்க அரசு ஆதரிக்குமா...

அமெரிக்கா அளித்த பதில் என்ன?
இதற்கு அமெரிக்க தூதரக அதிகாரி ராஜாராமிடம் பதிலளிக்கையில், நிச்சயம் அப்படிப்பட்ட முடிவை அமெரிக்கா ஆதரிக்காது. இந்தியாவின் ஒருங்கிணைந்த தன்மையை மட்டுமே நாங்கள் ஆதரிப்போம். இந்தியா மட்டுமல்ல, வேறு நாடுகளிடமும் கூட இப்படித்தான் நாங்கள் நடந்து கொள்வோம் என்றாராம்.

சீரியஸாகவே சிந்திக்கிறீர்களா... கேட்ட அமெரிக்கா
தொடர்ந்து அந்த அமெரிக்க அதிகாரி ராஜாராமிடம் பேசுகையில் உண்மையிலேயே தனி நாடு குறித்து சிந்தித்து வருகிறீர்களா என்று கேட்டுள்ளார்.

இளம் தொண்டர்களின் எண்ணம் அது - ராஜாராம்
அதற்குப் பதிலளித்த ராஜாராம், இல்லை. அப்படிப்பட்ட சிந்தனையில் கட்சித் தலைமை இல்லை. இது இளம் தொண்டர்கள் மனதில் நிலவும் கருத்து என்று பதிலளித்தாராம்.

ரஷ்யாவின் ஆதிக்கத்தால் தனி நாடு சிந்தனை
மேலும் ராஜாராம் கூறுகையில், சோவியத் யூனியின் தாக்கம் இந்தியாவில் அதிகரித்துத வருகிறது. ஜனநாயகத்தை குழி தோண்டிப் புதைக்க இந்திரா காந்திக்கு சோவியத் யூனியன் உதவி வருகிறது. அப்படி நடந்தால், அதில் இந்திரா வெற்றி பெற்றால், நிச்சயம் கம்யூனிஸ்டுகளின் ஆதிக்கம் இந்தியாவில் அதிகரித்து விடும். அப்படிப்பட்ட சூழலில் தனிநாடாக பிரிய வேண்டும் என்று எங்களது கட்சியின் இளம் தொண்டர்கள் விரும்புகிறார்கள் என்றாராம்.

கருணாநிதியுடனும் ஆலோசனை
இதற்கிடையே, இந்த விவகாரம் குறித்து முக்கியமான ஒரு கல்வியாளர் அப்போதைய முதல்வர் கருணாநிதியிடமும் பேசினாராம். அமெரிக்கா தனி நாடுகோரிக்கைக்கு உதவாலம் என்று அவர் கூறினாராம்.

அமெரிக்கா உதவாது - கருணாநிதி நம்பிக்கை
ஆனால் அதை கருணாநிதி ஏற்கவில்லையாம். வியட்நாமில் கிடைத்த பாடத்திற்குப் பிறகு அவ்வளவு சீக்கிரம் ஆசியாவில் எந்த புதிய நடவடிக்கையிலும் அமெரிக்கா இறங்காது, ஆதரிக்காது என்று திடமான நம்பிக்கையுடன் கூறினாராம் கருணாநிதி.
-
திமுக நாசமா போக காரணமே நாமதான்..ஒரிஜினல் திமுககாரன வளர்த்து விடுங்க! மேடையில் வெடித்த மாஜி மூர்த்தி! -
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
“துரோகி.. துரோகி”.. செல்வப்பெருந்தகை வந்தபோது திமுகவினர் கோஷம்.. திடீர் பரபரப்பு! -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த விஷக்காளான் நீங்க! விஜய் குறித்து திமுக ஐடி விங்க் விமர்சனம் -
அண்ணன் தம்பிகள்தானே! இடைத்தேர்தலில்.. அதிமுக-திமுக கூட்டணி! வாயை விட்ட சுப வீரபாண்டியன்! -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
“ஒரு இயக்கம்.. இன்னொரு இயக்கத்தின் சின்னத்தில் போட்டியிடக்கூடாது” - துரை வைகோ!












Click it and Unblock the Notifications