For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'ஒன் டென் -110 ஜெயலலிதா" -பெயர் சூட்டிய முன்னாள் து.சபா துரைசாமி

By Mathi
Google Oneindia Tamil News

ராணிப்பேட்டை: தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஒன் டென் அதாவது 110 ஜெயலலிதா என பெயர் சூட்டுவதாக அறிவித்திருக்கிறார் முன்னாள் துணை சபாநாயகர் துரைசாமி.

திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி ராணிப்பேட்டையில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்ட திமுக துணைப் பொதுச்செயலாளரும் முன்னாள் துணை சபாநாயகருமான துரைசாமி பேசுகையில், தி.மு.க., ஆட்சியின்போது சட்டசபையில் எதிர் கட்சிகள் பேசுவதற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. அதனால் ஆளும் கட்சியின் தரப்பில் ஏதாவது குற்றம் குறை இருந்தால், அவற்றை திருத்திக் கொள்ள முடியும். ஆனால் அ.தி.மு.க. ஆட்சியில் சட்டசபையில் எதிர் கட்சிகள் பேசுவதற்கு கொஞ்சம் கூட வாய்ப்பு இல்லை. ஆட்சியை பற்றி புகார் கூறினால் வெளியேறு என சபாநாயகர் தனபால் உறுப்பினர்களுக்கு உத்தரவிடுகிறார்.

அ.தி.மு.க., அமைச்சர்கள் அத்துறை பற்றி கூட தெரியாமல், எதிர் கட்சி எம்.எல்.ஏ., கேள்விக்கு பதில் அளிக்க கூட முடியாமல் உள்ளனர். சிறுபிள்ளை தனமாக உள்ள அ.தி.மு.க., அமைச்சர்களால் மக்களுக்கு பலனில்லை. கருணாநிதி என்ற பெயர் கேட்டாலே, ஜெயலலிதாவுக்கு பிடிப்பதில்லை.மருத்துவமனையில் இருந்த, டாக்டர்.கருணாநிதி என்பவரை, ஒரு மணி நேரத்தில் கைது செய்து, சிறையில் அடைத்துள்ளனர்.

தி.மு.க.,வை, மைனாரிட்டி என முதல்வர் ஜெயலலிதா கூறி வந்தார். தற்போது சட்டசபையில் அடிக்கடி விதி 110-ன் கீழ் உறுப்பினர்களை வெளியேற்றி வருவதாலும், முதல்வர் விதி 110-என பேசி வருவதாலும், முதல்வர் ஜெயலலிதாவுக்கு, 110 ஜெயலலிதா என பெயர் சூட்டுகிறோம். இனி தி.மு.க.,வினர் மேடைகளில் பேசும்போது, 110 ஜெயலலிதா என்று அழைக்க வேண்டும் என்றார் அவர்.

English summary
In DMK ruling Period ADMK leader Jayalalitha called it is "minority" Govt. Now DMK called "110 Jayalalithaa" for her regular statement is Assmebly under 110 Section.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X