பாக்.கில் பரீட்சை ஹாலில் மாணவி துப்பாக்கியால் சுட்டு தற்கொலை: பாலியல் தொந்தரவு காரணமா?
இஸ்லாமாபாத்: பாலியல் தொந்தரவின் காரணமாக பாகிஸ்தானில் பரீட்சை ஹாலில் பள்ளி மாணவி துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார்.
பாகிஸ்தான் பாகிஸ்தானின் தலைநகர் இஸ்லாமாபாத்தில் இருந்து 60 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ஹரீப்புரில் உள்ள அரசு பெண்கள் பள்ளியில் 10 வகுப்பில் படித்து வருபவர் நடஷா ஹபீப் (வயது 16). அவர் நேற்று பரீட்சை எழுதி கொண்டிருக்கும் போது திடீர் என தான் மறைத்துவைத்து இருந்த துப்பாக்கியை எடுத்து தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மாணவியை ஆசாத் என்ற வாலிபர் ஒருவர் தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.இதனால் மாண்வி இந்த முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட சிறுமியின் உடலில் பல்வேறு காயங்கள் இருந்ததாக மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்கொலை செய்துள்ள மாணவி ஹபீப் தனது அம்மாவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் என்னை மன்னித்து விடுங்கள். ஆசாத் என்ற வாலிபர் எனக்கு தொந்தரவு கொடுத்து வருகிறான். ஆதலால் எனக்கு உயிருடன் இருக்க பிடிக்கவில்லை என கூறியுள்ளார்.
மேலும், அவனது தொலைபேசி எண்ணையும் மாணவி எழுதி வைத்துள்ளார். போலீஸ் அந்த எண்ணை தொடர்பு கொண்ட போது அது உபயோகத்தில் இல்லை என தகவல் வந்துள்ளது.
இது குறித்து மாணவி படித்துவந்த பள்ளியின் ஆசிரியை கூறுகையில், மாணவி, ஆசிட் குடித்து தற்கொலை செய்ய முயற்சி செய்தார். அப்போது மற்ற மாணவிகள் அதனை பார்த்து தடுத்து நிறுத்தினர். இந்நிலையில், துப்பாக்கியை எடுத்து சுட்டு தற்கொலை செய்துள்ளார் என கூறினார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications