விஜயகாந்த் அவதூறு பேச்சு: ஏப். 17 ல் ஆஜராக நெல்லை கோர்ட் உத்தரவு
நெல்லை: தமிழக முதல்வர் ஜெயலலிதா குறித்த அவதூறு வழக்கில் வரும் 17ம் தேதி விஜயகாந்த் ஆஜராக வேண்டும் என்று நெல்லை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2012ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பாளையங்கோட்டை ஜவஹர் மைதானத்தில் நடந்த தேதிமுக பொது கூட்டத்தில் பேசிய விஜயகாந்த் முதல்வர் பற்றி தவறான தகவல் கூறினார் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. முதல்வரின் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையிலும், அவரை தரக்குறைவாக பேசியதாகவும் மாவட்ட குற்றப்பிரிவு அரசு வக்கீல் முத்துகருப்பன் விஜயகாந்த் மீது நெல்லை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு 3வது கூடுதல் செசன்சு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் விஜயகாந்த் வெள்ளிக்கிழமை நேரில் ஆஜாராக சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் அவர் ஆஜராகவில்லை.
நெல்லையில் வக்கீல்கள் நேற்று நீதிமன்ற பணிகளை புறக்கணிப்பு செய்ததால் அவர்களும் நீதிமன்றத்தில் ஆஜாராகவில்லை. இதையடுத்து வெளியூரை சேர்ந்த ஆல்வின் என்ற வழக்கறிஞர் ஆஜரானார். அப்போது வரும் 17ம் தேதி விஜயகாந்த் கோர்ட்டில் கண்டிப்பாக ஆஜாராக வேண்டும் என்று நீதிபதி கமலாவதி உத்தரவிட்டு வழக்கை ஓத்தி வைத்தார்.
-
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம்












Click it and Unblock the Notifications