தூக்கு மேடையில் புல்லர்- பிரதமரிடம் நேரில் கருணை மனு கொடுத்தார் பஞ்சாப் முதல்வர்!

Subscribe to Oneindia Tamil

Devinder Pal Bhullar
டெல்லி: டெல்லி குண்டுவெடிப்பு வழக்கில் உச்சநீதிமன்றத்தால் தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டிருக்கும் பஞ்சாப் மாநிலத்தின் புல்லருக்கு கருணை காட்டக் கோரி அம்மாநில முதல்வர் பிரகாஷ் சிங் பாதலும் துணை முதல்வரும் பாதலின் மகனுமாக சுக்பிர் சிங் ஆகியோர் இன்று பிரதமர் மன்மோகன்சிங்கை இன்று நேரில் சந்தித்து வலியுறுத்தினர்.

1993ஆம் ஆண்டு டெல்லியில் நடைபெற்ற குண்டு வெடிப்பு வழக்கில் 9பேர் பலியாகினர். இதில் காலிஸ்தான் விடுதலை இயக்கத்தைச் சேர்ந்த புல்லர் கைது செய்யப்பட்டார். அவருக்கு இந்த வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. தமக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ரத்து செய்யக் கோரி குடியரசுத் தலைவருக்கு 2003ஆம் ஆண்டு அவர் கருணை மனு அனுப்பினார். ஆனால் இந்த கருணை மனுவை 8ஆண்டுகால தாமதத்துக்குப் பிறகு குடியரசுத் தலைவர் நிரகாரித்தார். தமது கருணை மனுவை குடியரசுத் தலைவர் தாமதமாக நிராகரித்ததால் தமது தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்கக் கோரி அவர் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இம்மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் சிங்வி, முகோபாத்யா பெஞ்ச் நிராகரித்து தள்ளுபடி செய்தது. இதனால் புல்லருக்கு தூக்கு தண்டனை உறுதியானது.

ஆனால் புல்லரை தூக்கிலிடுவதற்கு ஒட்டுமொத்தமாக பஞ்சாப் மாநிலம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அம்மாநிலத்தின் ஆளும் சிரோமணி அகாலி தள அரசின் முதல்வர் பிரகாஷ்சிங் பாதல் மற்றும் அவரது மகனான துணை முதல்வர் சுக்பீர் சிங் ஆகியோர் டெல்லியில் இன்று பிரதமர் மன்மோகன்சிங்கை நேரில் சந்தித்துப் பேசினார். அப்போது புல்லருக்கு கருணை காட்டக் கோரும் மனுவை பிரதமர் மன்மோகன்சிங்கிடம் இருவரும் கொடுத்தனர்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த பிரகாஷ்சிங் பாதல், புல்லரை தூக்கிலிட்டால் பஞ்சாப் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு கடுமையாக பாதிக்கும்.இது தொடர்பாக பிரதமரை நேரில் சந்தித்து மனு கொடுத்துள்ளோம். புல்லருக்கு கருணை காட்ட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளோம். இந்தத் தீர்ப்பினால் கொந்தளிப்பான ஒரு நிலைபஞ்சாப்பில் இருந்து வருகிறது என்றார் அவர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+