மேலிடம் சொன்னால் திமுக கூட்டங்களில் கலந்து கொள்வேன்: மு.க.அழகிரி

மதுரை ரிசர்வ் லைன் தபால் நிலையம் அருகில் ரயில்வே முன்பதிவு மையத்தை அழகிரி இன்று காலை திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
மதுரை முழுவதும் 15 இலவச நவீன கழிப்பறைகளை கட்டிக் கொடுத்தேன். அதனை அனைத்தையும் கட்டண கழிப்பறையாக மாற்றி மதுரை மாநகராட்சியும், தமிழக அரசும் காசு பார்க்கிறது.
தென் மாவட்ட மக்களின் வசதிக்காக மதுரையில் அண்ணா பல்கலைக்கழக தொடங்கப்பட்டது. ஆனால், நான் கொண்டு வந்த அண்ணா பல்கலைக்கழக கிளையை தற்போது சென்னைக்கு மாற்றி விட்டார்கள்.
கேள்வி: திமுக கூட்டங்களில் நீங்கள் சமீபகாலமாக கலந்து கொள்ளாதது ஏன்?
அழகிரி: என்னை கலந்து கொள்ள மேலிடம் உத்தரவிட்டால் கலந்து கொள்வேன்.
கேள்வி: கனிமொழி உங்களை சந்தித்ததில் எதுவும் முக்கியத்துவம் உண்டா?
அழகிரி: அண்ணனை தங்கச்சி சந்திக்கக் கூடாதா?. அதைக் கூட திரித்து எழுதுகிறீர்களே. அண்ணனை பார்க்க தங்கச்சி வருவது என்ன தவறு? என்றார்.
மதுரை மாநகராட்சியில் ஊழல் குற்றச்சாட்டு பற்றிய கேள்விக்கு, மதுரை மாநகராட்சியில் மட்டுமா ஊழல் நடக்கிறது. தமிழ்நாட்டிலும் ஊழல் நடந்துகொண்டிருக்கிறது. இதை தட்டிக் கேட்க எதிர்க்கட்சிகள் சட்டமன்றத்தில் எழுந்து பேச முயன்றால் அனுமதிப்பதில்லை. அதேபோலதான் மதுரை மாநகராட்சியிலும் எதிர்க்கட்சிகள் ஊழலைப் பற்றி பேச அனுமதிப்பதில்லை என்றார்.
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா? -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா












Click it and Unblock the Notifications