For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மீண்டும் இலங்கை அரசு வெப்சைட்டுகளை ஹேக் செய்த விஷமிகள்

Google Oneindia Tamil News

கொழும்பு: இலங்கை அரசின் 3 இணையதளங்கள் ஹேக் செய்யப்பட்டுள்ளது.

இலங்கையில் ஏற்கனவே 22 அரசு இணையதளங்களை 'Bangladesh Grey Hat Hackers' என்ற ஹேக்கர்ஸ் குழு முடக்கியது. தற்போது அக்குழு இலங்கை அரசின் மூன்று இணையதளங்களை ஹேக் செய்துள்ளது.

சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு இணையதளம், நாடாளுமன்ற சபை முதல்வரின் இணையதளம், தயட்ட குருள்ள கண்காட்சி இணையதளம் ஆகியவை ஹேக்கர்களால் முடக்கப்பட்டுள்ளன.

இஸ்லாம் மதம் அவமதிக்கப்படுவதற்கு எதிராகவே இந்த தாக்குதல் நடத்தப்படுவதாக ஹேக்கர்கள் தெரிவித்துள்ளனர்.

இஸ்லாம் அவமதிக்கப்படுவதை நான் எதிர்க்கிறேன். உங்கள் மதத்தை அவமதிக்காதபோது இஸ்லாமை ஏன் இகழ்கிறீர்கள்? இலங்கை அரசாங்கத்துக்கு கடைசிஎச்சரிக்கை. இதை நிறுத்துங்கள் என்று சைபர் தாக்குதல் நடத்தியவர்கள் எச்சரித்துள்ளனர்.

எனினும் சைபர் தாக்குதலுக்கு இலக்கான மூன்று இணையதளங்களும் மீண்டும் இயங்கத் துவங்கிவிட்டது என்று கூறப்படுகிறது.

English summary
Bangladesh Grey Hat Hackers who hacked the Sri Lankan government websites earlier has hacked it now also. This time they targeted 3 websites.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X