டெல்லியில் தனியாக நடப்பதற்கு கூட பயமாக இருக்கிறது: சாய்னா நெஹ்வால்

தனியாக பெண்ணொருத்தி நகைகளணிந்து, இரவினில் பாதுகாப்பாக வலம் வருகிறாளோ, அன்று தான் நாம் முழுமையான சுதந்திரம் அடைந்ததாக அர்த்தம் என மகாத்மா காந்தி கூறினார். ஆனால் இன்றோ இந்தியாவின் தலைநகர் டெல்லியிலேயே பெண்களின் பாதுகாப்பு பகலிலேயே கேள்விக்குறியாக உள்ளது.
டெல்லியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவது கவலையை ஏற்படுத்தியுள்ளது. பெண்களுக்கு பாதுகாப்பற்ற நகரமாக உள்ள டெல்லி மாறிவிட்டதாக பெண்கள் அமைப்பினர் குற்றம் சாட்டி வருகின்றனர். அந்த வகையில் டெல்லியில் அதிக அளவில் நடக்கும் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் தன்னை மிகவும் பாதித்ததாக இந்தியாவின் நட்சத்திர பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நெஹ்வால் கூறியுள்ளார்.
நா வரும்போதெல்லாம் இப்படியா..?
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கடந்த முறை நான் டெல்லி வந்தபோது பாலியல் பலாத்கார சம்பவம் நடந்ததைப் போன்று இப்போது மீண்டும் நடந்துள்ளது.
அப்படியே... நா ஷாக் அயிட்டேன்
டெல்லியில் என்ன நடக்கிறது என்று நான் கவலையும் அதிர்ச்சியும் அடைந்தேன். இதனை தடுத்து நிறுத்த உடனடியாக ஏதாவது செய்ய வேண்டும்
டெல்லியின் புகழ் கெடுகிறது...
அழகான டெல்லி நகரம். ஆனால், இதுபோன்ற கொடுமையான சம்பவங்கள், டெல்லியின் புகழை உண்மையில் கெடுத்திருக்கின்றன
அய்யோ... பயமா இருக்குது
இதனால் டெல்லியில் தனிமையில் நடப்பதற்கு கூட பயமாக இருக்கிறது என தெரிவித்துள்ளார்.
பதக்க எதிர்பார்ப்பு...
ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றுள்ள சாய்னா, டெல்லியில் நாளை தொடங்க உள்ள இந்தியன் ஓபன் கிராண்ட் பிரிக்ஸ் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் விளையாட உள்ளார். 18 நாடுகளைச் சேர்ந்த 220 வீரர்-வீராங்கனைகள் பங்கேற்கும் இத்தொடரில், மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் சாய்னா மற்றும் பி.வி.சிந்து ஆகியோர் பதக்கம் வெல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications