எதிர்பாராமல் பெற்றோரால் கொலையான ஆருஷி: நீதிமன்றத்தில் சிபிஐ அதிகாரி விளக்கம்!

2008ம் ஆண்டு மே மாதம் 15ம் தேதி நள்ளிரவில் தனது வீட்டில் பிணமாகக் கிடந்தார் ஆருஷி. அவர் கொலை செய்யப்பட்டது விசாரணையில் தெரிய வந்தது. பின்னர் ஆருஷியையும் வீட்டு வேலைக்காரன் ஹேம்ராஜையும் ஆருஷியின் பெற்றோரே கொலை செய்தனர் என தெரியவந்துள்ளது.
காசியாபாத் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் இந்த வழக்கின் விசாரணையின் போது ஆஜரான சிபிஐ அதிகாரி கெளல், சம்பவம் நடந்த நாள் நள்ளிரவில் திடீரென சப்தம் கேட்டிருக்கிறது. அப்போது எழுந்த ஆரூஷியின் தந்தை ராஜேஸ், வேலைக்காரன் ஹேம்ராஜ் அறையில் எட்டிப்பார்த்திருக்கிறார். அங்கு சப்தம் வரவில்லை. பின்னர் மகள் ஆருஷி அறையில் சப்தம் வர அவர் சென்று பார்த்த போது இருவரும் படுக்கையில் ஒன்றாக இருந்திருக்கின்றனர்.
இதனால் ஆத்திரம் அடைந்த ஆரூஷியின் தந்தை ஹேமராஜை கோல்ப் ஸ்டிக்கால் அடித்திருக்கிறார். முதல் அடி ஹேமராஜ் மீது பட்டுள்ளது. இரண்டாவது முறையாக அடிக்க முயன்ற போது ஹேமராஜ் தலையை திருப்பிக் கொண்டதால் அது ஆரூஷியின் தலையில்பட்டுள்ளது. பின்னர் சம்பவ இடத்துக்கு வந்திருக்கிறார் ராஜேஸ் தல்வாரின் மனைவி நுபுர் தல்வார். இருவரையும் கொலை செய்து அதை மூடி மறைத்து அனைத்து தடயங்களையுமே ஆரூஷியின் பெற்றோரே அழித்தும் இருக்கின்றனர். இதில் ராஜேஸ் தல்வாரின் உறவினர்கள் இருவரும் உடந்தையாக இருந்துள்ளனர் என்று கெளல் விவரித்திருக்கிறார்.
அதே நேரத்தில் ராஜேஸ் தல்வார் மற்றும் அவரது மனைவியை கைது செய்யக் கூடாது உயர் அதிகாரிகள் எனக்கு அழுத்தம் கொடுத்தனர் என்றும் கெளல் கூறியுள்ளார்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications