இந்திய மாணவி மேகனா ராவுக்கு விருது: ஒபாமா பெருமை

அமெரிக்காவில் படிக்கும் மாணவ-மாணவிகளின் அறிவியல் ஆராய்ச்சியின் ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையில் ஆண்டுதோறும் அதிபரின் வெள்ளை மாளிகையில் அறிவியல் கண்காட்சி நடத்தப்பட்டுவருகிறது.
இந்த ஆண்டு நடைபெற்ற கண்காட்சியில் இந்திய வம்சாவழி மாணவி மேகனா ராவுக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய வம்சாவழி மாணவி :
ஆரேகான் பகுதியில் வசித்து வரும் இந்திய வம்சா வழியை சேர்ந்த 17 வயது மாணவி மேகனா ராவ் பங்கேற்றார்.
சார்க்கோல் புராஜக்ட் :
சார்க்கோல் (மரக்கரி) தொடர்பாக அவர் வெளியிட்ட 'புராஜெக்ட்' அறிக்கையை பார்த்து வியந்த அமெரிக்க அதிபர் ஒபாமா, மேகனா ராவை வெகுவாக பாராட்டினார்.
தொடர்ந்து முயற்சி செய் :
அவரை அருகில் அழைத்து கை குலுக்கி வாழ்த்து தெரிவித்த ஒபாமா 'உன்னால் நாங்கள் மிகவும் பெருமைப்படுகிறோம். இந்த நல்ல முயற்சியை தொடர்ந்து செய்' என்று கூறினார்.
'போர்ட்லேண்ட் இளம் ஆராய்ச்சியாளர்கள்' அமைப்பு :
அமெரிக்க இயன்முறை வரலாறு அருங்காட்சியகத்தின் சிறந்த விருதினைப் பெற்றுள்ள மேகனா ராவ், 'போர்ட்லேண்ட் இளம் ஆராய்ச்சியாளர்கள்' என்ற அமைப்பை ஏற்படுத்தி, இதர மாணவர்களுடன் இணைந்து மரக்கரியின் பயன்கள் குறித்து ஆய்வு செய்து வருகிறார்.
பொருளாதார நெருக்கடி சமயங்களில் :
2011-ம் ஆண்டு அமெரிக்கா கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்தித்தபோது, பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் அறிவியல் ஆராய்ச்சிக்காக அரசின் சார்பில் வழங்கப்படும் நிதி நிறுத்தி வைக்கப்பட்டது.
நிதி உதவி :
இந்நிலையில், அறிவியல் ஆராய்ச்சிக்கென போர்ட்லேண்ட் இளம் ஆராய்ச்சியாளர்கள் என்ற அமைப்பை ஏற்படுத்தி மாணவ-மாணவிகள் வெளி பள்ளிகள் மற்றும் அறிவியல் கண்காட்சிகளுக்கு சென்று பார்வையிட்டு தங்களின் அறிவியல் அறிவை வளர்த்துக் கொள்ள மேகனா ராவ் உதவிகரமாக இருந்து வந்துள்ளார்.
யங் நேச்சரலிஸ்ட் விருது :
இவரது தீவிரமான முயற்சியின் விளைவாக மேகனா ராவுக்கு இளம் இயன்முறையாளர் (யங் நேச்சரலிஸ்ட்) விருதும், பெப்சி நிறுவனத்தின் 5 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் உதவிப்பணமும், மற்றொரு நிறுவனத்திடமிருந்து 11 ஆயிரத்து 500 டாலர்கள் உதவிப்பணமும் கிடைத்துள்ளது என வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.
-
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்?












Click it and Unblock the Notifications